குபேரா… ராஷ்மிகாவின் முதல் தோற்றம் எப்படி?

Published On:

| By Selvam

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜூனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடிக்கும் திரைப்படம் குபேரா.

ஸ்ரீவெங்கடேஸ்வரா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். ஏற்கனவே தனுஷ் மற்றும் நாகர்ஜூனா போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தநிலையில், குபேரா படத்தில் ராஷ்மிகா மந்தனாவின் ஃபர்ஸ்ட் லுக் வீடியோ இன்று (ஜூலை 5) வெளியாகியுள்ளது.

அந்த வீடியோவில், அடர்ந்த வனப்பகுதியில் கடப்பாரை, மண்வெட்டியை கொண்டு செல்லும் ராஷ்மிகா மந்தனா, ஒரு இடத்தில் குழி தோண்டுகிறார்.

அதில் இருந்து ஒரு பெரிய சூட்கேஸ் பெட்டியை எடுக்கிறார். அந்த பெட்டியில் கட்டுக்கட்டாக பணம் இருக்கிறது. இதை பார்த்து மகிழ்ச்சியில் திளைக்கும் ராஷ்மிகா பணத்தை தொட்டு கும்பிடுகிறார். தொடர்ந்து பெட்டியை அங்கிருந்து எடுத்து செல்கிறார்.

இப்படியாக ராஷ்மிகாவின் முதல் தோற்றம் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் ராஷ்மிகா பணப்பெட்டியை எடுத்து செல்லும் இந்த காட்சி மிகவும் சுவாரஸ்யமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. தேவி ஸ்ரீபிரசாத்தின் பின்னணி இசை விறுவிறுப்பாக உள்ளது.

இந்த முதல் தோற்றம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை துரோகி : அண்ணாமலை காட்டம்!

நீட் பிஜி தேர்வு எப்போது? வெளியான புதிய அறிவிப்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share