Dhanush : தனுஷின் ‘குபேரா’ கதை இதுதானா?

Published On:

| By Manjula

Dhanush 51 movie title

தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் அவரின் 51-வது படத்திற்கு ‘குபேரா’ என தலைப்பு வைக்கப்பட்டு உள்ளது.

தனுஷ் தற்போது தன்னுடைய 5௦-வது படமான ராயனில் மிகுந்த பிஸியாக நடித்து வருகிறார். இப்படத்தினை அவரே இயக்கி நடிக்கிறார்.

இதில் தனுஷ் உடன் இணைந்து செல்வராகவன், எஸ்.ஜே.சூர்யா, காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், பிரகாஷ்ராஜ், வரலட்சுமி, அபர்ணா பாலமுரளி, துஷாரா விஜயன் என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

இதனால் இப்படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறது. இதனையடுத்து அவரின் நடிப்பில் உருவாகி வரும் 51-வது படத்தினை சேகர் கம்முலா இயக்குகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி என பான் இந்தியா படமாக இது உருவாகிறது.

Dhanush 51 movie title

இதில் தனுஷுடன் இணைந்து நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா, ஜிம் சர்ப், சவுரவ் கண்ணா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படத்திற்கு சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்தநிலையில் மஹா சிவராத்திரியை முன்னிட்டு இன்று (மார்ச் 8) படத்தின் டைட்டில் லுக் மற்றும் கிளிப்ம்ஸ் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டு இருக்கின்றனர். அதன்படி இப்படத்திற்கு ‘குபேரா’ என படக்குழு பெயர் சூட்டியுள்ளது.

தனுஷ் இதில் கிழிந்த சட்டையும், அழுக்கடைந்த உடையுமாக பரிதாப தோற்றத்தில் நின்று கொண்டிருக்கிறார். மீசை, தாடியுடன் அவரது தோற்றம் யாசகர் போல இருக்கிறது. பின்னணியில் சிவபெருமான் – பார்வதி இருவரும் பிரமாண்ட போஸ்டரில் இருக்கின்றனர்.

சிவபெருமான் கையில் இருக்கும் சிறிய குடமொன்றில் பார்வதி பொற்காசுகளை கொட்டிக் கொண்டிருக்கிறார். இதை தனுஷ் பார்த்துவிட்டு கேலியாக நம்மை திரும்பிப் பார்ப்பது போல, கிளிம்ப்ஸ் வீடியோ காட்சிகள் உள்ளன.

இந்த வீடியோவிற்கு பின்னணி இசையாக தேவிஸ்ரீ பிரசாத் உடுக்கை போன்ற ஒலியினை பயன்படுத்தி இருக்கிறார்.

Kubera First Look | Dhanush, King Nagarjuna, Rashmika Mandanna | Sekhar Kammula | Devi Sri Prasad

மீண்டும், மீண்டும் கேட்கத்தூண்டுவது போல இசை நம்மைக் கவர்ந்திழுக்கிறது. இதனை எல்லாம் வைத்துப் பார்க்கும்போது யாசகர் ஆன தனுஷ் பணக்காரராக போராடுவது போல கதை இருக்கலாம்.

இல்லை என்றால் பணத்தை இழந்து மீண்டும் அதனைக் கைப்பற்ற எடுக்கும் முயற்சிகள் ஆகவும், திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கலாம்.

இதனை ஆக்ஷன் பின்னணியில் மாஸ் காட்சிகளுடன் சொல்லும் படமாகத் தான் ‘குபேரா’ இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் வீடியோவை பார்த்த ரசிகர்கள் ‘தனுஷ் வித்தியாச தோற்றத்தில் செம மாஸாக இருக்கிறார்’ என வெகுவாக அவரைப் பாராட்டி வருகின்றனர். Dhanush 51 movie title

-மஞ்சுளா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

இன்போசிஸ் நிறுவனர் மனைவி சுதா மூர்த்தி எம்.பி.யாக நியமனம்!

பெங்களூரு குடிநீர் தட்டுப்பாடு : கார் கழுவ தடை… மீறினால் அபராதம்!