கோவை: பெண்களுக்கு மட்டும் வாரிசு சிறப்பு காட்சி!
கோவையில் கவிதா சினிமாஸ் திரையரங்கில் பெண்களுக்கு மட்டும் வாரிசு திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது.
தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வாரிசு படம் பொங்கல் ஸ்பெஷலாக கடந்த ஜனவரி 11 ஆம் தேதி வெளியானது. ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பைப் பெற்றுள்ளது.
குடும்ப கதையாக உருவான வாரிசு பெண்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் கோவையில் விஜய் மக்கள் இயக்கத்தினர் பெண்களுக்கான சிறப்புக் காட்சியை ஏற்பாடு செய்து அசத்தியுள்ளனர்.
படம் பார்க்க வந்த பெண்கள் திரையரங்கு வாசலில் முதல் நாள் முதல் காட்சிக்கு வந்தது போல் மேளதாளத்துடன் நடனம் ஆடி, பட்டாசு வெடித்துக் கொண்டாடினர். மேலும் வாரிசு திரைப்படத்திற்கு ஏற்பாடு செய்த விஜய் மக்கள் இயக்கத்தினருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர்.
கோவையை அடுத்த சாவடி பகுதியில் உள்ள கவிதா சினிமாஸ் என்ற திரையரங்கத்தில் இந்த பிரத்தியேக காட்சி திரையிடப்பட்டது.
திரையரங்கில் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் வாரிசு படத்தின் சிறப்புக் காட்சியை கைதட்டி விசிலடித்து கண்டு ரசித்தனர். இது தொடர்பான புகைப்பட காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மோனிஷா
அண்ணாமலையிடம் எடப்பாடி சொன்ன வெளிவராத தகவல்!
டிஜிட்டல் திண்ணை: பாஜக போட்டியிடலாமா? அண்ணாமலை நடத்தும் அவசர சர்வே!