நயன்தாரா-விக்னேஷ் சிவன் தயாரிப்பில் உருவான “கூழாங்கல்” படத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் இயக்குனர் வினோத் ராஜ். அந்த படத்தை தொடர்ந்து சூரியை கதாநாயகனாக வைத்து “கொட்டுக்காளி” என்ற படத்தை இயக்கி உள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக அன்னா பென் நடித்துள்ளார்.
சில மாதங்களுக்கு முன்பு கொட்டுக்காளி படத்தின் Glimpse வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பை அதிகரித்தது.
கொட்டுக்காளி படத்தை சிவகார்த்திகேயனின் SK புரொடக்ஷன்ஸ் மற்றும் தி லிட்டில் வேவ் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளது.
இந்நிலையில் கொட்டுக்காளி படம் 74 வது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் உலக திரைப்படங்களுக்கான பிரிவில் தேர்வாகி உள்ளதாக நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் பிரத்தியேக திரையிடலுக்கு தேர்வாகியுள்ள முதல் தமிழ் படம் “கொட்டுக்காளி” என்பதையும் நடிகர் சிவகார்த்திகேயன் குறிப்பிட்டுள்ளார்.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
திமுகவிடம் எம்.பி.சீட் கேட்கும் தவாக… அழைக்கும் அதிமுக : வேல்முருகன் பேட்டி!
நாடாளுமன்ற தாக்குதல்: நான்கு பேருக்கு போலீஸ் காவல்!
பிக்பாஸ் மிட் வீக் எவிக்ஷன்: வெளியேறப் போவது யார்?
‘மிஸ்டர் சந்திரமெளலி’ ரா.சங்கரன் மறைவு: திரையுலகினர் இரங்கல்!