நயன்தாரா-விக்னேஷ் சிவன் தயாரிப்பில் உருவான “கூழாங்கல்” படத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் இயக்குநர் வினோத் ராஜ்.
அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக “கொட்டுக்காளி” என்ற படத்தை வினோத் ராஜ் இயக்கி உள்ளார். இந்த படத்தில் கதையின் நாயகனாக சூரி நடிக்க கதாநாயகியாக அன்னா பென் நடித்துள்ளார்.
சில மாதங்களுக்கு முன்பு கொட்டுக்காளி படத்தின் Glimpse வீடியோ, போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பை அதிகரித்தது.
கொட்டுக்காளி படத்தை சிவகார்த்திகேயனின் SK புரொடக்ஷன்ஸ் மற்றும் தி லிட்டில் வேவ் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளது.
மேலும் 74 வது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் உலக திரைப்படங்களுக்கான பிரிவில் திரையிடலுக்கு தேர்வான முதல் தமிழ் படம் என்ற பெருமையையும் “கொட்டுக்காளி” திரைப்படம் பெற்றது. இந்நிலையில், மீண்டும் ஓர் சர்வதேச திரைப்பட விழாவில் கொட்டுக்காளி படம் திரையிட தேர்வாகி இருக்கிறது.
ரொமானியாவில் நடைபெறும் “Transilvania International Film Festival” என்ற சர்வதேச திரைப்பட விழாவில் கொட்டுக்காளி திரைப்படம் தேர்வாகி இருப்பதாக படத்தின் தயாரிப்பாளரும் நடிகருமான சிவகார்த்திகேயன் தனது மகிழ்ச்சியை எக்ஸ் தளத்தில் பகிர்ந்து உள்ளார்.
இயக்குனர் வினோத் ராஜன் இரண்டாவது படமும் சர்வதேச அளவில் நல்ல வரவேற்பு பெற்று வருவதை கண்ட திரை துறையினரும் ரசிகர்களும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
விரைவில் கொட்டுக்காளி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது. வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி கதாநாயகனாக நடித்த விடுதலை திரைப்படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து அடுத்ததாக விடுதலை 2 திரைப்படம் தயாராகி வருகிறது. மேலும், வரும் மே 31 ஆம் தேதி சூரி ஹீரோவாக நடித்துள்ள கருடன் திரைப்படம் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஈரான் அதிபர் உயிரிழப்பு: ஹெலிகாப்டர் பணியாளர்களின் புகைப்படம் வெளியீடு!
5 மாதத்தில் 1000 கோடி… மலைக்க வைத்த மல்லுவுட்!