சூரியின் “கொட்டுக்காளி” பட புது ஸ்டில்ஸ் வெளியீடு!

சினிமா

நயன்தாரா-விக்னேஷ் சிவன் தயாரிப்பில் உருவான “கூழாங்கல்” படத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் இயக்குனர் வினோத் ராஜ். நெதர்லாந்தில் நடைபெற்ற International Film Festival Rotterdam விருது விழாவில் கூழாங்கல் படத்திற்கு “டைகர் விருது” கிடைத்தது. சமீபத்தில் இந்த படம் சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகி தமிழ் ரசிகர்களின் பாராட்டுகளை பெற்றது.

தற்போது இயக்குனர் வினோத் ராஜ் தனது அடுத்த படத்தில் பிஸியாக பணியாற்றி வருகிறார். சூரி கதாநாயகனாக நடிக்கும் அந்த படத்திற்கு “கொட்டுக்காளி” என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் கதாநாயகியாக அன்னா பென் நடித்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன்பு  கொட்டுக்காளி படத்தின் Glimpse வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை அதிகரித்தது.

கொட்டுக்காளி படத்தை சிவகார்த்திகேயனின் SK புரொடக்ஷன்ஸ் மற்றும் தி லிட்டில் வேவ் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளது. தற்போது கொட்டுக்காளி படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் கொட்டுக்காளி படத்தின் புதிய புகைப்படங்களை படக்குழு வெளியிட்டுள்ளது. தற்போது இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

– கார்த்திக் ராஜா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

சேதமடைந்த ஐபோன்: பணத்தை திருப்பி செலுத்த நுகர்வோர் ஆணையம் உத்தரவு!

ஓபிஎஸ் மேல்முறையீட்டு வழக்கு நாளை ஒத்திவைப்பு!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *