நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள ‘கிங் ஆஃப் கோதா’ படத்தின் ட்ரெய்லர் இன்று (ஆகஸ்ட் 10) வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது.
கடந்த 2022 ஆம் ஆண்டு நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் தமிழில் ’ஹே சினாமிக்கா’ மலையாளத்தில் ’சல்யூட்’தெலுங்கில் ’சீதாராமம்’ இந்தியில் ’சுப் ரிவெஞ்ச் ஆப் தி ஆர்டிஸ்ட்’ போன்ற திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், துல்கர் சல்மான் நடிப்பில் திரைக்கு வர தயாராக இருக்கும் திரைப்படமான ’கிங் ஆஃப் கோதா’ திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகியுள்ளது.
இந்தப் படத்தில் துல்கர் சல்மானுடன் இணைந்து நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, ஷபீர், செம்பன் வினோத், சாந்தி கிருஷ்ணா, அனிகா சுரேந்திரன் உட்பட பலர் நடித்துள்ளனர்.
அபிலாஷ் ஜோஷி இயக்கியுள்ள இந்த படத்திற்கு ஜேக்ஸ் பிஜோய், ஷான் ரஹ்மான் இணைந்து இசையமைத்துள்ளனர். நிமீஷ் ரவி ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்தை துல்கர் சல்மானின் வேஃபர் பிலிம்ஸ் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் ஆகிய நிறுவனங்கள் தயாரித்துள்ளது.
மேலும், இந்த படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழியில் பான் இந்தியா திரைப்படமாக வெளியாக உள்ளது.
தற்போது வெளியாகி உள்ள ட்ரெய்லரின் படி, 1980-களில் நடைபெறும் கதையாக இந்த படம் உருவாகியுள்ளது. ராஜு என்கிற ராஜேந்திரன் எனும் கேங்ஸ்டர் பாத்திரத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ளார்.
கேங்ஸ்டர் வாழ்வில் ஏற்படும் காதல். அதன்பின் நடைபெறும் மாற்றங்கள் என கதை நகரும் என்பதைப் போல் இந்த ட்ரெய்லர் உள்ளது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
பேராசிரியர் அன்பழகன் சிலையை முதல்வர் திறந்து வைத்தார்!
“மலையோடு மோதி மண்ணாகி விட வேண்டாம்” – எடப்பாடியை எச்சரித்த பாஜக மாவட்ட தலைவர்