கியாரா – சித்தார்த் ஜோடி திருமணம் : களைகட்டும் ஜெய்சால்மர் பேலஸ்!
பாலிவுட் ஜோடி கியாரா அத்வானி – சித்தார்த் மல்ஹோத்ரா திருமணத்தை முன்னிட்டு ராஜஸ்தானில் உள்ள ஜெய்சால்மர் அரண்மனை களைகட்ட தொடங்கியுள்ளது.
இந்தியாவில் திருமணம் என்றாலே கொண்டாட்டம் தான். அதிலும் நட்சத்திர நடிகர் – நடிகைகள் திருமணம் என்று வந்துவிட்டால் சமூகவலைதளங்களில் செய்திகள் அலைமோதும்.
சமீபகாலமாக பாலிவுட் நட்சத்திர ஜோடிகளின் திருமணம் அதிகரித்து வருகிறது. ஏற்கெனவே ரன்வீர் சிங் – தீபிகா படுகோன், ரன்பீர் கபூர் – ஆலியா பட், கத்ரீனா கைஃப் – விக்கி கௌஷல் போன்ற பாலிவுட் ஜோடிகளின் பட்டியல் நீண்டுள்ளது.
இந்நிலையில் அந்த பட்டியலில் புதிதாக சித்தார்த் மல்ஹோத்ரா – கியாரா அத்வானி ஜோடி விரைவில் இணைய உள்ளனர்.
கடந்த 2016ம் ஆண்டு வெளிவந்த எம்.எஸ்.தோனி அன்டோல்டு ஸ்டோரி திரைப்படத்தில் சாக்ஷியாக நடித்து இந்திய ரசிகர்களை கவர்ந்தவர் கியாரா அத்வானி.
அதனைத்தொடர்ந்து லஸ்ட் ஸ்டோரிஸ், கபீர் சிங், ஷெர்ஷா, கோல்டு, சம்ஷீரா போன்ற படங்கள் மூலம் பிரபலமானார்.
இதில் 2021ம்ஆண்டு வெளியான ஷெர்ஷா திரைப்படத்தில் கியாராவுடன் சேர்ந்து நடித்தார் பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா. அப்போதிருந்து இருவரும் காதலித்து வருவதாகவும், அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் கிசுகிசு செய்திகள் வெளியாகின.
எனினும் இருவரும் அந்த செய்திகளுக்கு எந்தவிதமான மறுப்பையும் தெரிவிக்கவில்லை.
இந்நிலையில் சித்தார்த் மல்ஹோத்ரா – கியாரா அத்வானி ஜோடியின் திருமணம் பிப்ரவரி 6-ம் தேதி நடைபெற உள்ளது என்றும், ராஜஸ்தானில் உள்ள ஜெய்சால்மர் அரண்மனை ஹோட்டலில் திருமணத்தை பிரம்மாண்டமாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருமண விழாவில் பிரபல பாலிவுட் திரை பிரபலங்கள், நெருங்கிய நண்பர்கள் மற்றும் இருவரின் குடும்பத்தினர் உட்பட 100-125விருந்தினர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.
இதற்காக ஜெய்சால்மரில் உள்ள ஆடம்பர அரண்மனையில் சுமார் 80அறைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. விருந்தினர்களை அழைத்துச் செல்ல சுமார் 70சொகுசு கார்களும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.
கிறிஸ்டோபர் ஜெமா
”ஜாமீன் கிடைத்தும் சிறை” : பத்திரிகையாளர் சித்திக் கப்பன் வேதனை
இன்னும் முடியாது போன பட்ஜெட் பணிகள்: கள ஆய்வில் ஸ்டாலின் எச்சரிக்கை!