சலார் 2 : ஸ்ருதிஹாசனுக்கு பதிலாக பிரபல பாலிவுட் நாயகி?
இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர்கள் பிரபாஸ், பிரித்விராஜ் நடிப்பில் வெளியான சலார் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
தெலுங்கில் இந்த படம் பெரிய அளவில் வசூல் செய்தது. ஆனால் தமிழ், ஹிந்தி போன்ற மற்ற மொழிகளில் எதிர்ப்பார்த்த வரவேற்பும் வசூலும் இந்த படத்திற்கு கிடைக்கவில்லை.
இருந்தாலும், முதல் பாகத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் இரண்டாம் பாகத்திற்கான லீட் கொடுத்த விதம் சலார் 2 படத்தின் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் அதிகரித்தது. இதனால் சலார் படக்குழு ஓரளவிற்கு ஆறுதல் அடைந்திருக்கின்றனர்.
சலார் இரண்டாம் பக்கத்திற்கு “சலார் 2 – சவுரியாங்க பருவம்” என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
சலார் 2 படத்தின் திரைக்கதை எழுதும் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மேலும் இரண்டாம் பாகத்தில் இடம்பெறும் புதிய கதாபாத்திரங்களுக்கான நடிகர்கள் தேர்வும் ஒரு புறம் நடைபெற்றுக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் சலார் 2 படத்தில் பிரபல பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடிப்பதாக தகவல்கள் வெளியானது.
முதல் பாகத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் நடித்திருந்தாலும் பிரபாஸுக்கு ஜோடியாக இல்லாமல் கதைக்கு ஏற்ற கதாபாத்திரமாக தான் அவர் நடித்திருந்தார்.
தற்போது இரண்டாம் பாகத்தில் நடிகை கியாரா அத்வானி பிரபாஸுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார் என்றும் ஒரு பாடல் காட்சிக்கும் அவர் நடனமாட இருப்பதாகவும் கூறப்பட்டது.
இந்த தகவல் வெளியானதை தொடர்ந்து தற்போது சலார் 2 படத்தில் நடிக்க கியாரா அத்வானியை யாரும் அணுகவில்லை என்றும் அது தவறான தகவல் என்றும் கியாராவின் நெருங்கிய வட்டாரத்திலிருந்து கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே தெலுங்கில் மகேஷ் பாபுவின் பரத் அனி நேனு, ராம் சரணின் வினய விதேய ராமா மற்றும் தற்போது இரண்டாவது முறையாக ராம் சரணுடன் இணைந்து கேம் சேஞ்சர் ஆகிய படங்களில் கியாரா அத்வானி நடித்துள்ளார் என்பதும் குறிப்படத்தக்கது.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சூரியனில் நடந்த தரமான ‘சம்பவம்’!
தமன்னாவின் சிவசக்தி அவதாரம்..! ஒடேலா – 2 வீடியோ இதோ..!
டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!
“குரங்கு பெடல்” ஃபர்ஸ்ட் சிங்கிள்: ஸ்பெஷல் என்ன?