Khushi will release on Netflix

நெட்பிளிக்ஸில் ‘குஷி’!

சினிமா

தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பான் இந்தியா படமாக வெளியான குஷி வரும் அக்டோபர் 1ஆம் தேதி ஓடிடியில் வெளியாகிறது.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய் ரவிசங்கர் யெலமஞ்சலி ஆகியோர் இணைந்து தயாரித்த படம் குஷி. இந்த திரைப்படத்தை இயக்குநர் சிவ நிர்வானா இயக்கினார்.

ஜி. முரளி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைத்திருக்கிறார்.

விஜய் தேவரகொண்டா- சமந்தா நடிப்பில் இப்படம் கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி வெளியானது.

முதல் மூன்று நாள்களில் குஷி திரைப்படம் உலக அளவில் 70.23 கோடிகளை வசூலித்ததாக படக்குழு அறிவித்தது.

படம் வெளியாகி 20 நாட்கள் கடந்துவிட்ட நிலையில் குஷி படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி பற்றிய அறிவிப்பு இன்று (செப்டம்பர் 24) வெளியாகியுள்ளது.

அதன்படி குஷி திரைப்படம் வரும் அக்டோபர் 1ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அந்நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரியா

அக்டோபரில் வெளியாகிறது சாம்சங் கேலக்சி S23 FE!

தற்கொலை எண்ணம் எனக்கும் தோன்றியது: கமல்ஹாசன்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *