நடிகை த்ரிஷாவுடன் இணைந்து நடிக்காதது குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மன்சூர் அலிகான் மீது தேசிய மகளிர் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் என்று மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு இன்று (நவம்பர் 19) தெரிவித்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான லியோ திரைப்படத்தில் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், மன்சூர் அலிகான், மிஷ்கின் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
சமீபத்தில் மன்சூர் அலிகான் அளித்த பேட்டியில், த்ரிஷாவுடன் இணைந்து நடிக்காதது குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்.
மன்சூர் அலிகான் பேச்சுக்கு நடிகை த்ரிஷா, மாளவிகா மோகனன், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இதற்கு விளக்கமளித்த மன்சூர் அலிகான், “நான் எப்பவும் சக நடிகைகளுக்கு ரொம்ப மரியாதை கொடுக்கிறவன் என எல்லோருக்கும் தெரியும். த்ரிஷாகிட்ட தப்பா கட் பண்ணி காமிச்சு கோபப்பட வைச்சிருக்காங்க” என்று தெரிவித்துள்ளார்.
நடிகை த்ரிஷா குறித்த மன்சூர் அலிகான் சர்ச்சை பேச்சுக்கு தேசிய மகளிர் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் என்று குஷ்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “மன்சூர் அலிகான் விவகாரத்தை தேசிய மகளிர் ஆணைய சீனியர்கள் கவனத்திற்கு எடுத்து சென்றுள்ளேன். அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இப்படிப்பட்ட அசுத்தமான நபரை யாரும் விட்டுவிட முடியாது. என்னையும் மற்ற சக நடிகைகளையும் இவர் கேவலமாக பேசியிருக்கிறார். நடிகை த்ரிஷாவுடன் துணை நிற்கிறேன். பெண்களை பாதுகாக்க நாம் போராடும் போது இத்தகைய மனிதர்கள் சமூகத்திற்கு தேவையற்றவர்கள்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
ஆர்.எஸ்.எஸ் பேரணி: காவல்துறை கெடுபிடி!
INDvsAUSFinal: சாதனை படைத்த கையுடன் ஆட்டமிழந்த கோலி