KH234 poojai video released

‘KH 234’ அப்டேட்: நாயகன் மீண்டும் வரார்!

சினிமா

விக்ரம் பட வெற்றிக்கு பிறகு சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2, இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் KH233, இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் KH234 ஆகிய படங்களில் கமல் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது.

கமல்ஹாசனும் மணிரத்னமும் கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் படம் என்பதால் KH234 படத்தின் மீதான எதிர்பார்ப்பு மற்ற படங்களை விட அதிகளவில் உள்ளது.

KH234 படத்திற்காக கமல்ஹாசனின் லுக் டெஸ்ட் சமீபத்தில் நடந்து முடிந்துவிட்டதாக கூறப்பட்டது. நேற்று (அக்டோபர் 26) KH234 படத்தின் தொடங்க விழா நிகழ்ச்சியில் கமல்ஹாசன் மணிரத்னம் இருவரும் கலந்து கொண்ட புகைப்படம் எக்ஸ் தளத்தில் டிரெண்டானது.

KH234 poojai video released

இந்நிலையில் இன்று அக்டோபர் 27 ஆம் தேதி KH234 படத்தின் தொடங்க விழா நிகழ்ச்சி வீடியோ வெளியாகி உள்ளது. இந்த நிகழ்ச்சியில் கமல், மணி ரத்னம், ரவி கே. சந்திரன், ஏ.ஆர். ரகுமான், அன்பறிவு, ஶ்ரீகர் பிரசாத் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த வீடியோவிற்கு “KH234 – BEGIN THE BEGIN” என்று பெயரிடப்பட்டுள்ளது.

1987 ஆம் ஆண்டு கமல் – மணி ரத்னம் கூட்டணியில் வெளியான நாயகன் படத்தின் மாஸ் காட்சி இந்த வீடியோவின் தொடக்கத்தில் இடம்பெற்றுள்ளது. கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து KH234 படத்தை தயாரிக்கிறது.

KH234 படத்தில் நடிகை த்ரிஷாவும் நடிகர் துல்கர் சல்மானும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இது குறித்த அதிகார்ப்பூவமான தகவல் இன்னும் வெளியாக வில்லை.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

– கார்த்திக் ராஜா

தமிழ்நாட்டில் பெண் வாக்காளர்கள் அதிகம்… மிகப் பெரிய தொகுதி எது? சிறிய தொகுதி எது?

ஆதீனம் முதல் பெட்ரோல் குண்டு வரை! சிசிடிவி வெளியிட்டு ஆளுநருக்கு ஆதாரங்களோடு போலீஸ் பதில்!

+1
0
+1
1
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *