மீண்டும் சார்ம் லுக்கில் யஷ்

Published On:

| By admin

‘கே.ஜி.எஃப்’ படத்திற்காக முடி, தாடி வளர்த்து புதிய கெட்டப்பிற்கு மாறினார் யஷ். 2018ஆம் ஆண்டு இந்த படம் வெளியான பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து இதன் இரண்டாம் பாகம் தற்போது இந்தியா முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது.

திரைப்படம் வெளியான இரண்டே நாட்களில் இந்தியா முழுவதும் கிட்டத்தட்ட 240 கோடிக்கும் அதிகமான வசூலை பெற்று பாக்ஸ் ஆஃபீஸில் சாதனை படைத்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் இந்த படத்தின் மூன்றாம் பாகமும் வெளியாக இருக்கிறது என ‘கே.ஜி.எஃப்2’ படத்தின் முடிவிலேயே தெரிவித்து இருப்பார்கள்.

கன்னட சினிமாக்களை கன்னட ரசிகர்களே மதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு முன்பு இருந்த நிலையில் ‘கே.ஜி.எஃப்’ திரைப்படம் பான் இந்தியா அளவில் கன்னட சினிமா மீது கவனம் குவிக்க வைத்துள்ளது என பலரும் தங்களது பாராட்டுகளை இணையத்தில் தெரிவித்து வருகின்றனர்.

கிட்டத்தட்ட ‘கே.ஜி.எஃப்2’ படத்திற்காக நடிகர் யஷ் ஐந்தாண்டுகளுக்கும் மேலாக முடி, தாடி வளர்த்து வருகிறார். சென்னையில் நடந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கூட ‘முடி தாடி எல்ல ட்ரிம் செய்து லவ்வர் பாயாக ரொமாண்டிக் படங்களில் நடிக்க விருப்பம் உண்டா?’ என்ற கேள்வி யஷ்ஷிடம் கேட்கப்பட்டது.

அந்த அளவுக்கு தாடி எடுத்தால் யஷ்ஷை அடையாளம் தெரியாமல் போய் விடுமோ என சொல்லும் அளவுக்கு கடந்த சில ஆண்டுகளாக தாடியுடன் வலம் வருகிறார் யஷ். தற்போது ‘கே.ஜி.எஃப்2’ வெளியாகி வெற்றிகரமாக ஓடி கொண்டிருப்பதால் தாடி, முடி வெட்டி மீண்டும் சார்ம் லுக்கிற்கு திரும்பியுள்ளார் யஷ்.

‘கே.ஜி.எஃப்’ பட இயக்குநர் பிரசாந்த் நீல், தற்போது தன்னுடைய அடுத்த பான் இந்தியா படமான ‘சலார்’ரில் கவனம் செலுத்தி வருகிறார். யஷ்ஷூம் தன்னுடைய அடுத்த படத்திற்கு தயாராகிறார். இதனால் தாடி, மீசை ட்ரிம் செய்துள்ள யஷ்ஷின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அடுத்து எப்போது ‘கே.ஜி.எஃப்3’ படத்தின் பணிகள் ஆரம்பிக்கும் என அதற்கான அறிவிப்புகளை எதிர்ப்பார்த்து ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.

**ஆதிரா**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share