விஜய் உடன் இணையும் கேஜிஎஃப் 2 வில்லன்!

சினிமா

நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள ‘தளபதி 67’ படத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் கமல் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த விக்ரம் திரைப்படம் 100 நாட்களை தாண்டி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகர் விஜயை இயக்கவுள்ளார். இந்த படம் முழுவதும் ஆக்‌ஷன் படமாக அமையவுள்ளது என்று லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் தனியார் யூ-ட்யூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தன்னை அழைத்து ’தளபதி 67’ படத்தில் நடிப்பதற்கு அழைப்பு விடுத்ததாக தெரிவித்திருந்தார்.

KGF 2 Villain pairing up with Vijay


இந்நிலையில் ,தற்போது கேஜிஎஃப் 2 படத்தில் வில்லனாக நடித்த பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் ’தளபதி 67’ படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்தப் படத்திற்காக அவரிடம் 10 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

KGF 2 Villain pairing up with Vijay

தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் தற்போது விஜய் நடித்து வரும் ’வாரிசு’ படத்தில் ராஷ்மிகா, குஷ்பு, சரத் குமார், பிரபு, ஸ்ரீகாந்த், ஷாம் என பெரும் நடிகர் பட்டாளமே நடித்து வருகின்றனர். அதேபோல் தளபதி 67 படத்திலும் பெரும் நடிகர் பட்டாளம் நடிக்கலாம் என எதிர்பார்க்கப்டுகிறது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.