நடிகர் விஜய் நடிப்பில் உருவான லியோ திரைப்படம் பல சர்ச்சைகளுக்கு மத்தியில் இன்று (அக்டோபர் 19) உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜயுடன், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன் என பல்வேறு நட்சத்திரங்கள் நடித்துள்ள இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் முதல் காட்சி 9 மணிக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மும்பை மற்றும் வெளிநாடுகளில் 4 மணிக்கே லியோ திரைப்படம் ரிலீஸ் ஆகியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
நடிகர் விஜய்க்கு கேரளாவில் அதிகளவில் ரசிகர்கள் உள்ளனர். இதுவரை இல்லாத அளவுக்கு அங்கு அதிகபட்சமாக 2,263 காட்சிகளுடன் ஏற்கெனவே முதல்நாள் முன்பதிவிலேயே லியோ வரலாற்று வசூல் சாதனை செய்துள்ளது.
இந்த நிலையில் நேற்று இரவு முதல் கேரளா தியேட்டர்களில் லியோ ரிலீஸ் கொண்டாட்டங்கள் களைகட்டியது. டிஜே, வான வேடிக்கை, ஆட்டம் பாட்டம் என கேரள ரசிகர்கள் அதிகபடுத்தினர்.
https://twitter.com/unnirajendran_/status/1714662942808146165
விடிய விடிய காத்திருந்து அதிகாலை 4 மணிக்கு படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்களை அளித்து வருகின்றனர்.
மேலும் ரசிகர்கள் எதிர்பார்த்தபடி லியோ திரைப்படம் எல்.சி.யூ கதைக்குள் வந்ததை அடுத்து மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.
https://twitter.com/IsmartSunny89/status/1714798470584803337
இதே போன்று, கர்நாடகாவில் பெங்களூரு, திருப்பதியிலும், ஆந்திராவில் ஹதாரபாத்திலும் லியோ திரைப்படத்தின் முதல் காட்சியை கண்ட ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
எப்போதும் இந்த 10 வீட்டு அழகுக் குறிப்புகளை மறந்துடாதிங்க!
கிச்சன் கீர்த்தனா: அத்திக்காய் பொரியல்