அக்காவிற்காக திருப்பதி சென்ற கீர்த்தி சுரேஷ்

சினிமா

தனது அக்கா இயக்குநராக அறிமுகமாகியுள்ளதை தொடர்ந்து திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை கீர்த்தி சுரேஷ் இன்று(மே27) சாமி தரிசனம் செய்தார்.

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷ், தமிழில் ‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் நடிகையர் திலகம் படத்திற்காக தேசிய விருது பெற்றுள்ளார்.

இவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான சாணிக் காயிதம் நல்ல வரவேற்பைப் பெற்றது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நடித்துள்ள மாமன்னன் படம் விரைவில் வெளியாக உள்ளது.

இதனிடையே, நேற்றிரவு இவர் நடித்துள்ள ’ரகு தாத்தா’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை சமூக வலைதளங்களில் தெரிவித்திருந்தார்,

தற்போது அவரது அக்கா ரேவதி சுரேஷ் ‘தேங்க் யூ’ என்ற குறும்படத்தினை இயக்கியுள்ளார். இந்த குறும்படம் கீர்த்தி சுரேஷ் யூடியூப் பக்கத்தில் வெளியாகயுள்ளது

இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் இன்று குடும்பத்துடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

சாமி தரிசனத்திற்கு பின்னர் கோவில் வளாகத்தில் உள்ள ரங்கநாயகர் மண்டபத்தில் நடிகை கீர்த்தி சுரேஷிற்கு தீர்த்தம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கோவில் பிரகாரத்தை விட்டு வெளியே வந்த போது , முண்டியடித்து கொண்டு அவருடன் ரசிகர்கள் செல்பி எடுக்க முயன்றனர்.

இதனால் கீர்த்தி சுரேஷ் வெளியேற முடியாமல் திணறினார். உடனே தேவஸ்தான பாதுகாப்பு ஊழியர்கள் கீர்த்தி சுரேஷை மீட்டு பேட்டரி கார் மூலம் அவர் கார் இருக்கும் இடத்திற்கு பாதுகாப்பாக அழைத்து சென்றனர்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நீண்ட நாட்களுக்குப் பிறகு ஏழுமலையானை தரிசனம் செய்தது மகிழ்ச்சியாக உள்ளது. எனது அக்கா இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். அதற்காகவே இங்கு வந்துள்ளோம். விரைவில் போலா ஷங்கர் படம் வர உள்ளது” என்று கூறினார்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

புதிய நாடாளுமன்றம்: கொண்டாடுகிறேன் குடியரசுத் தலைவரோடு…குழப்பும் கமல்

உதயநிதி அறக்கட்டளை வங்கிக்கணக்கு முடக்கம்!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *