கையில் துப்பாக்கியுடன் மிரட்டும் கீர்த்தி சுரேஷ்

சினிமா

தமிழ், தெலுங்கு மொழிகளில் 1970 – 1980களில் தயாரான படங்களில் தவிர்க்க முடியாத நடிகையாக இருந்தவர் விஜயலலிதா.

தமிழ் படங்கள் வியாபாரம் ஆக இவரது கிளாமர் நடனம் அவசியம் தேவை என்கிற அளவிற்கு ரசிகர்களிடம் ஆதிக்கம் செலுத்தியவர். லேடி ஜேம்ஸ்பாண்டாக நடித்த இவருக்கு ரீட்டா, ரிவால்வர் ரீட்டா என பெயர் சூட்டப்பட்டிருக்கும், தற்போது அவரது ரிவால்வர் ரீட்டா எனும் கதாபாத்திர பெயரில் திரைப்படம் ஒன்று தயாராகி வருகிறது.

கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கும் ‘ரிவால்வர் ரீட்டா’ படத்தின் வித்தியாசமான முதல் பார்வையை நடிகை சமந்தா வெளியிட்ட நிலையில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

கடந்த 2022-ம் ஆண்டு கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ‘சாணிக் காயிதம்’, ‘சர்காரு வாரி பாட்டா’, ‘வாஷி’ உள்ளிட்ட படங்கள் வெளியாகின.

இதையடுத்து தெலுங்கில் நானியுடன் தசரா படத்திலும், தமிழில் மாமன்னன் படத்தில் உதயநிதியுடனும் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். அவரது நடிப்பில் இந்த இரண்டு படங்களும் இந்த ஆண்டு திரைக்கு வர உள்ளன.

இந்நிலையில், கீர்த்தி சுரேஷ் அடுத்ததாக நடிக்கும் படம் ‘ரிவால்வர் ரீட்டா’. இயக்குநர் சந்துரு இயக்கும் இப்படத்தை பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் தி ரூட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. தற்போது இப்படத்தின் முதல் பார்வை வெளியாகி ரசிகர்களிடையே கவனம் ஈர்த்துள்ளது. முதல் பார்வையை நடிகை சமந்தா தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இராமானுஜம்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டிலும் ’விஜய்’ முன்னிலை!

நேபாள விமான விபத்து : 40 பேர் பலி!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *