நடிகை கீர்த்தி சுரேஷ் ‘தசரா’ படத்தில் இடம்பெற்றிருக்கும் தாம் தூம் பாடலுக்கு லுங்கி கட்டிக் கொண்டு டான்ஸ் ஆடிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். இவர் விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக கமர்ஷியல் படங்களில் நடித்திருப்பதுடன், கதாநாயகிகளை மையமாகக் கொண்ட படங்களிலும் நடித்து வருகிறார்.
குறிப்பாக, நடிகையர் திலகம் (மகாநதி), சாணி காயிதம் போன்ற படங்கள் சினிமா ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன. ஆகையால் இவரது நடிப்பிற்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர்.
தற்போது கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு, மலையாளம் என சினிமா துறையில் பிசியான நடிகையாக வலம் வருகிறார். தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக ’மாமன்னன்’ படத்திலும், தெலுங்கில் நானிக்கு ஜோடியாக ’தசரா’ படத்திலும் நடித்துவருகிறார்.
இதில் ’தசரா’ படத்தில் இடம்பெற்றிருக்கும் ’தாம் தூம்’ என்ற பாடலுக்குக் கீர்த்தி சுரேஷ் தனது தோழி அக்ஷிதா சுப்பிரமணியன் உடன் லுங்கி கட்டிக் கொண்டு குத்தாட்டம் போட்டுள்ளார்.
அந்த டான்ஸ் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து “என்னுடைய தோஸ்த்துடன் தாம் தூம், உங்களது தாம் தூம் எங்கே?” என்று பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோவை பார்த்த பலரும் கீர்த்தி சுரேஷின் நடனம் அருமையாக இருக்கிறது என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மோனிஷா
16 கேப்டன்களின் கியூட் செல்ஃபி!
”நாங்கள் இன்னும் சாகல..” : அப்டேட் கொடுத்த கார்ட்டூன் நெட்வோர்க்!