கீர்த்தி சுரேஷ் திருமணம்: நேரில் வாழ்த்திய விஜய்
தமிழ் சினிமாவின் பிரபல நடிகையான கீர்த்தி சுரேஷுக்கு இன்று( டிசம்பர் 12) கோவாவில் திருமணம் நடைபெற்றது.
தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து தென்னிந்தியாவில் பிரபலமானவர் கீர்த்தி சுரேஷ்.
நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் சாவித்திரி வேடத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்து இருந்தார். இந்தப் படம் மிக பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்த படத்துக்காக கீர்த்தி சுரேசுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது.
கடைசியாக கீர்த்தி சுரேஷ் நடித்த ரகு தாத்தா திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.
இதற்கிடையே கீர்த்தி சுரேஷ் திருமணம் குறித்து வதந்திகள் இணையத்தில் வைரலாகின.
ஆனால் தனது திருமணம் தொடர்பாக வெளிப்படையாக சொல்லாமல் இருந்து வந்தார் கீர்த்தி சுரேஷ்.
அண்மையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்ட பதிவு ஒன்றின் மூலம் தனது காதலை உறுதி செய்தார். கடந்த மாதம் திருப்பதிக்கு சென்றிருந்தபோது திருமணம் குறித்து பொதுவெளியில் அறிவித்தார்.
இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் தனது 15 வருட காதலன் ஆண்டனி தட்டிலை இன்று கோவாவில் கரம் பிடித்துள்ளார்.
பள்ளி பருவம் முதலே இருவரும் நட்பாக பழகி வந்ததாகவும், கொச்சியில் உள்ள தனியார் கல்லூரியிலும் இருவரும் சேர்ந்து படிப்பை தொடர்ந்ததாகவும் கூறப்படுகிறது.
பின்னர் இவர்களது நட்பு காதலாக மலர்ந்து இன்று தம்பதிகளாகியுள்ளனர்.
இவர்களது திருமணத்தில் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் கலந்து கொண்டனர்.
தவெக தலைவர் விஜய்யும் கோவா சென்று திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.
விஜய் பட்டு வேட்டி சட்டையில் இருக்கும் புகைப்படமும், கீர்த்தி சுரேஷின் திருமண புகைப்படமும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
#Keerthi Suresh என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் உள்ளது.
பைரவா படத்தில் விஜய்யும் கீர்த்தி சுரேஷும் இணைந்து நடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரியா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
திண்டுக்கல் மருத்துவமனையில் தீ விபத்து… லிப்ட்டுக்குள் போராடிய உயிர்கள் : என்ன நடந்தது?
வேலைவாய்ப்பு : யுபிஎஸ்சி-யில் பணி!