தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் பிசியாக நடித்து வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.
தற்போது அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகி மெகா பிளாக் பஸ்டர் ஹிட்டான “தெறி” படத்தின் ஹிந்தி ரீமேக்கில் கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளார் என்று கூறப்படுகிறது.
ஆனால் தற்போது “தெறி” ரீமேக்கில் நடிப்பதற்கு முன்பாக ஒரு ஹிந்தி வெப் சீரிஸில் கீர்த்தி நடிக்க போகிறார் என்று சொல்லப்படுகிறது.
பிரபல ஹிந்தி தயாரிப்பு நிறுவனமான யாஷ் ராஜ் ஃபில்ம்ஸ் தயாரிக்க உள்ள வெப் சீரிஸில் தான் கீர்த்தி முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
திரில்லர் கதைக்களத்தில் உருவாக உள்ள அந்த வெப் சீரிஸில் நடிகை ராதிகா ஆப்தேவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம். இந்த வெப் சீரிஸை தர்மராஜ் ஷெட்டி என்ற அறிமுக இயக்குனர் இயக்க உள்ளாராம். இந்த வெப் சீரிஸின் கதை ஆலோசனைக்காக கீர்த்தி சுரேஷ் அடிக்கடி மும்பை சென்று வருவதாக கூறப்படுகிறது.
ஒருவேளை திட்டமிடப்பட்டது போலவே இந்த வெப் சீரிஸ் தொடங்கினால் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகும் முதல் வெப் சீரிஸ் இதுவாக தான் இருக்கும்.
இந்த வெப் சீரிஸ் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கடலூர்: சுனாமி நினைவு தினம் அனுசரிப்பு!
மீண்டும் கொரோனா: அதிக பாதிப்புக்குள்ளான மாநிலம் எது?