அருள்நிதியின் கழுவேத்தி மூர்க்கன்: வசூல் எவ்வளவு?

சினிமா

9 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட ‘கழுவேத்தி மூர்க்கன்’ திரைப்படம் 1.50 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்துள்ளது.

‘டாடா’ படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, தயாரிப்பாளர் எஸ் அம்பேத் குமாரின் ஒலிம்பியா பிக்சர்ஸின் சமீபத்திய வெளியீடான ‘கழுவேத்தி மூர்க்கன்‘ படத்தில் அருள்நிதி மற்றும் துஷாரா விஜயன் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

சந்தோஷ் பிரதாப், சாயாதேவி, முனிஷ்காந்த், சரத்லோகித் சாவா, ராஜ சிம்மன், யார் கண்ணன் மற்றும் பலர் நடித்திருந்தனர்.

சை.கௌதம ராஜ் இயக்கியுள்ளார். ரெட் ஜெயண்ட் மூவிஸ் மூலம் தமிழ்நாட்டில் 310 திரையரங்குகளில் இந்தத் திரைப்படம்  வெளியானது. 

இதனையொட்டி சனிக்கிழமை (27.5.2023) ஒட்டுமொத்த அணியினரும் கேக் வெட்டி தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

நிகழ்வில் ஒலிம்பியா பிக்சர்ஸ் தயாரிப்பாளர் எஸ். அம்பேத் குமார் பேசுகையில்,

“2023 ஆம் ஆண்டு ஒலிம்பியா பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு ஒரு நம்பிக்கைக்குரிய வருடமாக அமைந்துள்ளது. ‘டாடா’ படத்தின் மாபெரும் வெற்றியுடன் இந்த வருடம் துவங்கியது.

இப்போது எங்களின் சமீபத்திய வெளியீடான ‘கழுவேத்தி மூர்க்கன்’ மூலம் இன்னொரு வெற்றியைப் பரிசாகக் கொடுத்துள்ளோம்.

தமிழகம் முழுவதும் 310 திரையரங்குகளில் வெளியான இப்படம், விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களிடமிருந்து அமோகமான வரவேற்பைப் பெற்று வருவதை பார்க்க மகிழ்ச்சி அளிக்கிறது.

ரெட் ஜெயண்ட் மூவிஸ் மீண்டும் எங்கள் படத்தை வெளியிட்டதற்காக நன்றி தெரிவிக்க இந்த வாய்ப்பைப் பயன்படுத்துகிறேன்.

இது எங்கள் கூட்டணிக்கு மீண்டும் கிடைத்த வெற்றி. இயக்குநர் சை கௌதம ராஜின் அசாதாரன உழைப்புக்கும், கதை சொல்லலில் சரியான எமோஷன் மற்றும் பொழுதுபோக்கையும் கொண்டு வந்திருக்கும் அவரது திறமைக்கும் நன்றி.

அருள்நிதி தனது நம்பிக்கைக்குரிய நடிப்பு மற்றும் மிகுந்த அர்ப்பணிப்புடன் முழு படத்தையும் உயர்த்துவதில் மிகப்பெரிய தூணாக இருந்துள்ளார்.

துஷாரா, சந்தோஷ் பிரதாப், சாயா தேவி, முனிஷ்காந்த், சரத்லோகித் சாவா மற்றும் படத்தில் நடித்த நடிகர்கள் அனைவரும் மிகவும் சிறப்பாக தங்கள் பணியை செய்துள்ளனர்.

ஒலிம்பியா பிக்சர்ஸ் உலகளாவிய பார்வையாளர்களின் ரசனைகளை ஈர்க்கும் உள்ளடக்கம் சார்ந்த மற்றும் பொழுதுபோக்கு திரைப்படங்களை தொடர்ந்து தயாரிக்கும்” என்றார்.

படம் வெளியான இரண்டாவது நாளே தயாரிப்பாளர் தரப்பில் படம் வெற்றி என விழா கொண்டாடினாலும் திரையரங்குகளில் பார்வையாளர்களிடம் போதிய வரவேற்பை பெறவில்லை.

சுமார் 9 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட இப்படத்திற்கு கடந்த மூன்று நாட்களில் சுமார் 1.50 கோடி ரூபாய் மட்டுமே தமிழக திரையரங்குகள் மூலம் மொத்த வசூலாக கிடைத்துள்ளது.

இராமானுஜம்

IPL FINAL: டாஸ் வென்ற தோனி பந்துவீச்சைத் தேர்வு செய்தது ஏன்?

தமிழ்நாடு காவல்துறைக்குள்ளேயே மோதல்… முதல்வர் அறிவாரா?

Kazhuvethi Moorkkan Box Office
+1
0
+1
1
+1
1
+1
5
+1
1
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *