கயல், பரியேறும் பெருமாள் போன்ற படங்களின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஆனந்தி. தமிழ் படங்கள் மட்டுமின்றி பல தெலுங்கு படங்களிலும் கயல் ஆனந்தி நடித்திருக்கிறார். கடைசியாக இவரது நடிப்பில் வெளியான தமிழ் படம் ராவண கோட்டம்.
தற்போது கயல் ஆனந்தி நடிப்பில் உருவாகி வரும் படம் மங்கை. இந்த படத்தை குபேந்திரன் காமாட்சி இயக்கியுள்ளார். அமீரின் “இறைவன் மிக பெரியவன்” படத்தை தயாரிக்கும் ஜேஎஸ்எம் பிக்சர்ஸ் நிறுவனம் மங்கை படத்தை தயாரித்துள்ளது.
இந்நிலையில் இன்று (ஜனவரி 1) ‘மங்கை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டார். பெண்ணின் உடல் பாகங்களை செல்போனில் புகைப்படம் எடுப்பத்தைப் போல மங்கை படத்தின் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து உள்ளது. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் மங்கை படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பாஜக நிர்வாகிகளை சந்திக்கும் மோடி
ஜப்பானை தாக்கும் சுனாமி, நிலநடுக்கம்: உதவி எண்கள் அறிவிப்பு!