‘டாடா’ திரைப்படத்திற்கு பிறகு நடிகர் கவின் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘ஸ்டார்’. ‘பியார் பிரேமா காதல்’ என்ற திரைப்படத்தை இயக்கிய இளன் இப்படத்தை இயக்கி உள்ளார்.
கவின், லால், கீதா கைலாசம், அதிதி போஹன்கர், ப்ரீத்தி முகுந்தன் போன்ற பலர் நடித்திருக்கும் இந்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. 80-ஸ் காலத்து பேஷனில் படத்தின் லுக்கே வித்தியாசமாக உள்ளது.
டாடா திரைப்படம் கவினுக்கு பெரிய திருப்புமுனையாக அமைந்தது. குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டாலும் பல கோடி வசூல் செய்தது. இந்த திரைப்படத்தின் வெற்றியால் கவினிற்கு ரசிகர்கள் அதிகரித்துள்ளனர்.
இந்நிலையில் தற்பொழுது இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகிற மே மாதம் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
ஸ்டார் படத்தின் பர்ஸ்ட் லுக், கிளிம்ப்ஸ் வீடியோக்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன. இதனால் இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது.
இந்த படத்தைத் தொடர்ந்து இயக்குனர் இளன், தனுஷ் நடிக்கும் புதிய படத்தை இயக்க இருக்கிறார். சமீபத்திய பேட்டியில் நடிகர் தனுஷை இயக்க இருப்பதை இளன் உறுதி செய்துள்ளார்.
–பிரியங்கா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
Rathnam: அடிச்சது ஜாக்பாட்…சோலோவாக களமிறங்கும் விஷால்… காரணம் என்ன?
இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் டெலிட் ஏன்?… யுவன் விளக்கம்!
Pushpa 2: ஆல் டைம் ரெக்கார்டு! ஓடிடி + ஹிந்தி உரிமை இத்தனை கோடியா?