லிஃப்ட், டாடா படங்களின் வெற்றியை தொடர்ந்து நடிகர் கவின் நடிப்பில் வெளியாக உள்ள படம் ஸ்டார். பியார் பிரேமா காதல் படத்தை இயக்கிய இயக்குனர் இளன், ஸ்டார் படத்தை இயக்கியுள்ளார்.
முதலில் ஸ்டார் படத்தில் ஹீரோவாக ஹரிஷ் கல்யாண் நடிக்க தொடங்கினார். அதன் பிறகு அவர் இந்த படத்திலிருந்து விலகியதால் கவினுக்கு ஸ்டார் பட வாய்ப்பு கிடைத்தது. ரைஸ் ஈஸ்ட் மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா என இரண்டு நிறுவனங்கள் இணைந்து ஸ்டார் படத்தை தயாரித்துள்ளது. யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் டிசம்பர் 9 ஆம் தேதி (இன்று) இந்த படத்தின் புரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. இந்த புரோமோ வீடியோவிற்கு “போட்டோ ஆல்பம் ஆப் ஸ்டார்” என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இந்த வீடியோவில் அப்பா மகன் இடையில் இருக்கும் உரையாடல், ரஜினி – விஜய் கட் அவுட்களுடன் போட்டோ எடுத்துக்கொள்வது, காதல், முதல் ஆட்டோகிராஃப், அம்மாவின் பாசம் என அனைத்து எமோஷன்களையும் புகைப்படங்களின் மூலமாக காட்சிப்படுத்தி, ஸ்டார் படத்தின் ஒன் லைனை ரசிகர்களுக்கு சொல்ல முயற்சி செய்துள்ளனர். வரும் டிசம்பர் 12 ஆம் தேதி சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு ஸ்டார் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது “போட்டோ ஆல்பம் ஆப் ஸ்டார்” படத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மீண்டும் ராஜன் ஆக அமீர்… மாயவலை டீசர் இதோ!
சென்னை வெள்ளம்: விசாரணை நடத்த மத்திய இணை அமைச்சர் வலியுறுத்தல்!