லிஃப்ட், டாடா படங்களின் வெற்றியை தொடர்ந்து கவின் நடிப்பில் தயாராகி வரும் படம் “ஸ்டார்”. பியார் பிரேமா காதல் படத்தை இயக்கிய இளன் இப்படத்தை இயக்கியுள்ளார்.
ரைஸ் ஈஸ்ட் மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா என இரண்டு நிறுவனங்கள் இணைந்து ஸ்டார் படத்தை தயாரித்துள்ளது. யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இளன் இயக்கிய பியார் பிரேமா காதல் படத்தை யுவன் ஷங்கர் ராஜா தான் தயாரித்து, இசையமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் இந்த படத்தின் போஸ்டர்கள், புரோமோ வீடியோக்கள் மற்றும் பாடல் வீடியோ வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
Dubbing done!#Star ⭐️ pic.twitter.com/AxudJmMnui
— Kavin (@Kavin_m_0431) March 27, 2024
இந்த படத்தில் கவினுடன் நடிகர்கள் லால், அதிதி போஹங்கர், பிரீத்தி முகுந்தன், கீதா கைலாசம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஸ்டார் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக சில மாதங்களுக்கு முன் படக்குழு அறிவித்தது.
இந்நிலையில், தற்போது இந்த படத்தின் டப்பிங் பணிகள் பிஸியாக நடைபெற்று கொண்டிருக்க, கவின் ஸ்டார் பட டப்பிங் பணிகள் நிறைவு செய்தது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளார்.
அந்த புகைப்படத்தில் திரையைப் பார்த்தவாறு கவின் மைக் முன்பு நின்று கொண்டிருக்க, திரையில் ஸ்டார் படத்தில் கவினின் அறிமுக காட்சி இடம்பெற்று இருக்கிறது.
விரைவில் ஸ்டார் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்டார் படத்திற்கு பிறகு இயக்குநர் நெல்சன் திலீப்குமாரின் உதவி இயக்குநர் சிவபாலன் இயக்கத்தில் கவின் ஒரு புதிய படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
500 ரூபாய் நோட்டு குவியலில் படுத்து தூங்கிய அரசியல்வாதி: யார் இவர்?
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!