மெர்ரி கிறிஸ்துமஸ் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை கத்ரீனா கைஃப் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட தற்போது அவை வைரலாகி வருகின்றன.
தமிழன் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. ஹீரோ, வில்லன் என எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் துணிந்து நடிப்பதால் அவர் கை நிறைய படங்கள் இருக்கிறது. காத்துவாக்குல ரெண்டு காதல் மற்றும் விக்ரம் ஆகிய இரண்டு படங்களும் அடுத்தடுத்து வெற்றியை கொடுத்த நிலையில் தற்போது இந்தி, தெலுங்கு, மலையாளம் என பிறமொழி பட வாய்ப்புகளும் அதிகளவில் குவிந்து வருகின்றன.
அந்த வகையில் தற்போது தேசியவிருது பெற்ற அந்தாதுன் படத்தின் இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் மெர்ரி கிறிஸ்துமஸ் படத்தில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. இவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் நடிக்கிறார்.
தற்போது படத்திற்கான தயாரிப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில் நடிகர் விஜய் சேதுபதியுடன் படப்பிடிப்பு தளத்தில் எடுத்த கேண்ட்டிட் புகைப்படங்களை கத்ரீனா கைஃப் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது அவை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

பாடல்கள் எதுவுமின்றி 90 நிமிடங்கள் மட்டுமே ஓடக்கூடிய இத்திரைப்படம் இந்த ஆண்டு டிசம்பர் 23 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது..

இப்படம் கிறிஸ்துமஸ் தினத்தன்று நடக்கும் ஒரு சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
– க.சீனிவாசன்