கார்த்தி உடனடியாக மன்னிப்பு கேட்டது ஏன்? – கஸ்தூரி சொல்லும் ரகசியம்!

Published On:

| By Kumaresan M

மெய்யழகன் பட விழாவில் நடிகர் காத்தியிடம் திருப்பதி லட்டு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. நடிகர் கார்த்தி இந்த கேள்வியை தவிர்க்க முயன்ற போது, அரங்கத்தில் சிரிப்பலை எழுந்து விட்டது.

இதையடுத்து, ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் பட விழாவில் லட்டு குறித்து கேள்வி கேட்பீர்களா? என்று கார்த்தியை கடுமையாக எச்சரிக்க, நடிகர் கார்த்தி உடனடியாக மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.

இது குறித்து நடிகை கஸ்தூரி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணின் கடுமையான எச்சரிக்கைக்கு பிறகு, நடிகர் கார்த்தி மன்னிப்பு கேட்டுள்ளார்.

அதோடு, தானும் வெங்கடேஸ்வராவின் பக்தன் என்றும் கார்த்தி தெரிவித்துள்ளார். கார்த்திக்கு தெலுங்கில் நல்ல ரசிகர் பட்டாளம் உண்டு. விரைவில் அவருடைய படம்  அங்கு ரிலீஸ் ஆகிறது என்பதையும் உணர்ந்து கொள்ள முடிகிறது. நகைச்சுவை என்ற பெயரில் வந்த பிரச்னையை நடிகர் கார்த்தி தவிர்க்க முயன்றார். அது முடியாமல் தோல்வியடைந்தார்.

அந்த கேள்விக்கு தீவிரமாக எதிர்வினையாற்றியிருந்தால், அல்லது ஆங்கரை எச்சரித்திருந்தால் எந்த பிரச்னையும் இருந்திருக்காது. ஆனால், அந்த கேள்விக்கு கருத்து சொல்லி சர்ச்சையாக்க கூடாது என கருதி பலரை காயப்படுத்தினார். சனாதன நடைமுறைகள் குறித்து கார்த்தியின் குடும்பம் சர்ச்சையில் சிக்குவது இது முதல் முறையல்ல. சபரிமலை குறித்த சிவக்குமாரின் கருத்துக்களும் ஜோதிகாவின் கோவில் எதிர்ப்பு கருத்து போன்றவை முக்கியமானது” என்று கூறியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

அதிக ரிஸ்க்குள்ள கேரளாவில் அணு உலைகளா? கிளம்பிய எதிர்ப்பு!

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை… இன்றைய நிலவரம் இதுதான்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share