தந்தையர் தின ஸ்பெஷல் : கருமேகங்கள் கலைகின்றன ஸ்னீக் பீக்!
தந்தையர் தினத்தை முன்னிட்டு ‘கருமேகங்கள் கலைகின்றன’ படத்தின் முன்னோட்டம் வெளியாகியுள்ளது.
இயக்குநர் தங்கர்பச்சான் இயக்கத்தில் தயாராகி வரும் திரைப்படம் ‘கருமேகங்கள் கலைகின்றன’. இந்தப் படத்தில் பாரதிராஜா, யோகிபாபு, கௌதம் மேனன், அதிதி பாலன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
வாவ் மீடியா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மூலம் வீரசக்தி இப்படத்தைத் தயாரிக்கிறார். கடந்த ஜனவரி 14ம் தேதியோடு படப்பிடிப்பு நிறைவடைந்தது.
இந்த படத்தின் முதல் தோற்றத்தை உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த மார்ச் 6ஆம் தேதி வெளியிட்டார்.
இந்நிலையில் இன்று தந்தையர் தினத்தை முன்னிட்டு ‘கருமேகங்கள் கலைகின்றன’ படத்தின் முன்னோட்ட காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன.
ஒரு தந்தையின் அன்பு, தியாகம், பொறுமை, இரக்கம், அடக்கம், நேர்மை, மன்னிக்கும் தன்மை, உண்மை ஆகியவை தன்னலமற்றது என்ற கேப்ஷனுடன் தங்கர் பச்சான் இதனை வெளியிட்டுள்ளார்.
யதார்த்த வாழ்வியலை வைத்து இப்படம் உருவாகி இருப்பது முன்னோட்ட காட்சி மூலம் தெரியவருகிறது.
பிரியா
அதிமுக யாருக்கும் அடிமையில்லை : எடப்பாடி பழனிசாமி
செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் எப்போது? அமலாக்கத் துறைக்கு நீடிக்கும் சிக்கல்!