பருத்திவீரன் பட விவகாரத்தில் இயக்குனர் அமீர் குறித்த தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவின் விமர்சனத்திற்கு பாரதி ராஜா, பொன் வண்ணன், சமுத்திரக் கனி, சசி குமார், கரு பழனியப்பன் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்தனர். karu palaniappan says gnanavel raja continues problem
இதனை தொடர்ந்து அமீர் குறித்து பேசியதற்கு ஞானவேல் ராஜா வருத்தம் தெரிவிப்பதாக அறிக்கை வெளியிட்டார். ஞானவேல் ராஜாவின் விளக்கத்தை ஏற்க மறுத்து சமுத்திரக்கனி, சசிகுமார் மீண்டும் அறிக்கை வெளியிட்டு கண்டித்துள்ளனர். இதனால் பருத்தி வீரன் பட சர்ச்சையானது நீண்டுகொண்டே செல்கிறது.
இந்தநிலையில் பருத்திவீரன் பட பிரச்சனை குறித்து நமது மின்னம்பலம் யூடியூப் சேனலுக்கு இயக்குனர் கரு பழனியப்பன் பேட்டி அளித்துள்ளார். அதில் பருத்திவீரன் பிரச்சனையில் இயக்குனர் அமீர் ஓரங்கட்டப்பட்டதாகவும், படத்தின் வெற்றிக்கு பிறகும் ஞானவேல் ராஜா தொடர்ந்து பிரச்சனையில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். அந்த காணொலி பேட்டியின் வரி வடிவம் இங்கே…
பருத்திவீரன் பட பிரச்சனை தற்போது பேசுபொருளாக என்ன காரணம்?
இந்த படத்தில் சம்பந்தப்பட்ட சமுத்திரகனி, சசிகுமார் போன்றோர் இதுவரை பேசியதில்லை. ஞானவேல் கொடுத்த பேட்டியால் தான் பேசியிருக்கிறார்கள். நாங்கள் அமீருக்கு ஆதரவாக குரல் கொடுத்தற்கு பதிலாக இயக்குனர் சங்கம் பேசியிருக்க வேண்டும்.
ஒரு இயக்குனர் பொதுவெளியில் எப்படி நடத்தப்படுகிறார் என்பது தான் எனக்கு இருந்த கோபம். அமீர் உங்களை தயாரிப்பாளராக அறிமுகப்படுத்தியதற்காகவும், வெற்றி படம் கொடுத்ததற்காகவும் அவருக்கு நீங்கள் எதுவும் செய்யவில்லை. வெற்றி படங்கள் நிறைய எடுத்ததாக கூறுகிறீர்கள். அதில் ஏதாவது ஒரு படம் பருத்தி வீரன் உயரத்தை தொட்டதா?
அமீரும், கார்த்தியும் மீண்டும் நினைத்தால் கூட இது போன்ற ஒரு படத்தை எடுக்க முடியாது. படம் என்பது நிகழ்வது. இயக்குனர் மட்டும் ஒரு படத்தை எடுக்க முடியாது. கார்த்தி அமீருக்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்றால் இந்த படம் எடுக்க முடிந்திருக்காது. அனைவரின் ஒத்துழைப்பு இல்லாமல் இந்த படம் சாத்தியமில்லை. நடிப்பு, இசை, கதை போன்ற அனைத்தும் ஒரு சேர எப்போதாவது தான் அமையும். அது பருத்தி வீரன் படத்திற்கு அமைந்தது.
‘என்னுடைய படங்களில் பெண் கதாபாத்திரத்தை நடிக்க வைக்க நான் முத்தழகு கதாபாத்திரத்தை பார்த்து விட்டு தான் கதாநாயகியை வர சொல்வேன்’ என்று சுதா கொங்கரா சொல்லியிருக்கிறார். ஆனால் ‘அமீருக்கு படத்தின் மேக்கிங் தெரியவில்லை’ என்று சுதா கொங்கரா தன்னிடம் கூறியதாக ஞான வேல் சொல்கிறார். அது ஒன்றும் தவறில்லை எல்லோருக்கும் எல்லா மேக்கிங்கும் பிடிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. காலம் தான் அதனை முடிவு செய்யும்.
முள்ளும் மலரும் இன்றும் நாம் பார்ப்பதற்கான காரணம் அதன் மேக்கிங் இப்போது தான் புரிகிறது. முள்ளும் மலரும் வெளியான போது இந்த படம் தனக்கு பிடிக்கவில்லை என்று அதன் தயாரிப்பாளர் கூறினார்.
ரஜினியை அறிமுகப்படுத்திய இயக்குனர் பாலச்சந்தர், அவரிடம் ‘உங்களுக்கு பிடித்த படம் எது?’ என்று கேட்கிறார். மறு விநாடியே ‘மகேந்திரன் இயக்கிய முள்ளும் மலரும் படம் தான் எனக்கு பிடிக்கும்’ என்று ரஜினி கூறினார். அவரது வாழ்வில் முள்ளும் மலரும் ஏற்படுத்திய தாக்கத்தை உணர்ந்தவர் ரஜினிகாந்த். ரஜினியிடம் ஈரமுள்ள நடிகன் இருந்தான் என்பது தெரிந்தது முள்ளும் மலரும் படத்தில் தான். இன்றும் நான் ரஜினி ரசிகராக நீடிப்பதற்காக காரணம் அது தான்.
ஒரு நல்ல படம் கொடுத்து, வசூல் வெற்றி பெற செய்த இயக்குனர் ஓரமாக இருக்கிறார். அவரை தொடர்ந்து உதாசீனப்படுத்திக்கொண்டே இருக்கிறீர்கள்.
சிவக்குமாரின் 100-வது படமான ரோசாப்பூ ரவிக்கைக்காரி வெற்றிப்படமாக அமைந்தது. அதற்கு காரணமான இயக்குனர் தேவராஜ் மோகனை இன்று வரை சிவக்குமார் மரியாதையாக நடத்துகிறார்.
இயக்குனர்களை மரியாதையாக நடத்த தெரிந்த சிவக்குமார், தனது மகன்களுக்கு அதனை சொல்லிக்கொடுத்திருக்க வேண்டும். தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கும், இயக்குனர் அமீருக்கும் இடையில் பிரச்சனை ஏற்பட்டு விட்டது. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட சிவக்குமார், சூர்யா, கார்த்தி ஆகியோர் அமீர் பக்கம் நின்றிருக்க வேண்டும். ஞானவேல் ராஜாவை அவர்கள் கண்டித்திருக்க வேண்டும்.
ரூ.1.5 கோடி சிவக்குமார் குடும்பத்திற்கு பெரிய தொகையா? ஒவ்வொரு இயக்குனரும், தயாரிப்பாளரும் தங்கள் பிள்ளைகளை படத்தில் நடிக்க வைக்க தடுமாறுகிறார்கள்.
இந்த படத்தில் அவர்கள் சிவக்குமார் குடும்பம் முதலீடு செய்யவில்லை. படம் தானாக நிகழ்ந்து விட்டது. ரூ.1.5 கோடியை மொத்தமாக கொடுக்கவில்லை என்றாலும் பாதி பாதியாக கொடுத்திருக்கலாம்.
பருத்திவீரன் பட பிரச்சனைக்கு என்ன தான் தீர்வு?
ஒரே பிரச்சனை பணம் தான். ஞானவேல் ராஜாவை சிவக்குமார் குடும்பம் தொடர்ந்து காப்பற்றிக்கொண்டே இருக்கிறார்கள்.
பல ஆண்டுகள் கழித்து ஞானவேல் ராஜா அமீரை பார்க்க வந்ததுபோல, என்றைக்காவது ஒரு நாள் சூர்யாவும் கார்த்தியும் பார்க்க வருவார்கள்.
அமீர் யாருக்கும் பிரயோஜனம் இல்லாதவர் என்று ஞானவேல் ராஜா கூறுகிறார். பிரயோஜனம் இருந்தால் அவன் காலை கழுவி குடிக்கலாமா?
எனக்கு அமீரால் ஒரு பிரயோஜனமும் இல்ல. அவருக்கு ஏற்பட்ட சிக்கலில் நான் பேசுகிறேன். பிரயோஜனத்தையோ நமக்கு விளையும் நன்மையையோ பார்த்து ஒரு நிலைப்பாடு எடுக்க கூடாது. உண்மையின் பக்கம் நின்று நிலைப்பாடு எடுக்க வேண்டும்.
இத்தனை பெரிய வெற்றிக்கு பிறகும் ஞானவேல் ராஜா தொடர்ந்து பிரச்சனையில் ஈடுபட்டு வருகிறார். பண்ணையாரையெல்லாம் ஒழித்து விட்டார்கள் என்று நினைத்தேன். ஞானவேல் பேட்டியை பார்த்தால் பண்ணையார்தனம் தெரியும்” என்று இயக்குனர் கரு.பழனியப்பன் தெரிவித்தார்.
முழு பேட்டியை காண…
சந்திப்பு : பெலிக்ஸ் இன்ப ஒளி
தொகுப்பு : செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
அதிமுக பெயர், சின்னம், கொடியை பயன்படுத்த மாட்டேன்: ஓபிஸ்
விஜயகாந்த் பூரண குணமடைய வேண்டும்: எடப்பாடி பழனிசாமி
karu palaniappan says gnanavel raja continues problem
rybpharm: rybpharm canada – semaglutide
https://rybpharm.com/# semaglutide
rybpharm rybelsus: semaglutide – buy rybelsus canada
http://furpharm.com/# furpharm