‘கார்த்தி 26’ டைட்டில் இதுதான்!

Published On:

| By Selvam

Karti 26 Pooja Video

கார்த்தி நடிப்பில் ராஜூ முருகன் இயக்கத்தில் வெளியான 25-வது படமான ஜப்பான் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. Karti 26 Pooja Video

ஜப்பான் படத்தை தொடர்ந்து சூது கவ்வும், காதலும் கடந்து போகும் ஆகிய படங்களை இயக்கிய நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி தனது 26-வது படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். நடிகர்கள் கௌதம் கார்த்திக், சத்யராஜ், ராஜ்கிரண் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஒரு பக்கா ஆக்சன் கமர்ஷியல் படமாக உருவாகி வரும் கார்த்தியின் 26-வது படத்தில் கார்த்தி மற்றும் ராஜ் கிரண் தாத்தா, பேரன் கதாபாத்திரங்களில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள் இருவருமே இந்த படத்தில் எம்.ஜி.ஆர் ரசிகர்களாக நடித்திருக்கிறார்கள் என்றும் படத்திற்கு “வா வாத்தியாரே” என்று டைட்டில் வைக்க படக் குழு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. தற்போது கார்த்தி 26-வது படத்தின் பூஜை நிகழ்ச்சி வீடியோவை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்த பட பூஜை நிகழ்ச்சியில் இயக்குநர் நலன் குமாரசாமி, தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, நடிகர்கள் கார்த்தி, கௌதம் கார்த்தி, சூர்யா, சிவகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த பட பூஜை நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர்  புகைப்படம் இடம்பெற்றுள்ளதை நம்மால் வீடியோவில் பார்க்க முடிகிறது.

இதனை வைத்து பார்க்கும் போது நிச்சயம் கார்த்தியின் 26-வது படத்தில் கார்த்தி ஒரு எம்ஜிஆர் ரசிகராக நடித்து உள்ளார் என்பதும், இந்த படத்திற்கு “வா வாத்தியாரே” என்று படக்குழு டைட்டில் வைக்க திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கார்த்தியின் 26-வது படத்தை தொடர்ந்து 96 படத்தின் இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி தனது 27வது படத்தில் நடித்து வருகின்றார்.

அந்த படத்தில் நடிகர் கார்த்தியுடன் இணைந்து நடிகர் அரவிந்த் சாமியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதன் பின் சர்தார் 2, கைதி 2, தீரன் 2 ஆகிய படங்கள் கார்த்தியின் லைன் அப் உள்ளது.

– கார்த்திக் ராஜா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: சீஸ் ஸ்டஃப்டு குடமிளகாய்

வுமன்ஸ் டே விஷ் கூட பேக் ஐடிக்கு தானா? : அப்டேட் குமாரு

J Baby : ஜெ பேபி – திரை விமர்சனம்!

நேற்று அட்மிஷன், இன்று ஆபரேஷன்… அப்பல்லோவில் அஜித்! முழு ஹெல்த் அப்டேட்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel