விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றி பெற்ற திரைப்படம் ’96’.
அப்படத்தின் இயக்குனர் பிரேம் குமார், தற்போது கார்த்தி, அரவிந்தசாமி, ஸ்ரீ திவ்யா, ஸ்வாதி கொண்டே ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள மெய்யழகன் படத்தை இயக்கியுள்ளார். சூர்யாவின் 2D எண்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இந்த படம் இம்மாதம் 27 ஆம்தேதி அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், விநாயகர் சதுர்த்தி தினத்தை முன்னிட்டு மெய்யழகன் பட தெலுங்கு பதிப்பிற்கான பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.
சூர்யா, கார்த்தி நடிப்பில் தமிழில் வெளியாகும் படங்கள் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகிறது. இருவருக்கும் ஆந்திர, தெலங்கானா மாநிலங்களில் குறிப்பிடத்தக்க ரசிகர்கள் உள்ளனர்.
இந்த நிலையில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியாகவுள்ள மெய்யழகன் படத்தின் தெலுங்கு பதிப்பிற்கு ’சத்யம் சுந்தரம்’ என தலைப்பு வைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இராமானுஜம்
ஆசிரியர்கள் போராட்டம் : அமைச்சர் அன்பில் மகேஷ் பதில்!
போராட்டத்தில் ஆசிரியர்கள் பங்கேற்பு : மாணவர்கள் தவிப்பு!