ரிலீஸுக்கு தயாரான கார்த்திக் நரேனின் ’நிறங்கள் மூன்று’!
‘துருவங்கள் 16’ படத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் இயக்குனர் கார்த்திக் நரேன். இந்த படத்தை தொடர்ந்து ‘நரகாசூரன்’ என்ற படத்தை கார்த்திக் நரேன் இயக்கினார். ஆனால் ஏதோ சில காரணத்தினால் அந்த படம் இன்னும் வெளியாக வில்லை. அதனை தொடர்ந்து அருண் விஜய்யின் ‘மாஃபியா’, தனுஷின் ‘மாறன்’ ஆகிய படங்களை இயக்கினார் கார்த்திக் நரேன்.
மிகப் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த இரண்டு படங்களும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வில்லை. அதன் பிறகு ‘நாடக மேடை’ என்ற படத்தை இயக்க போவதாக கார்த்திக் நரேன் அறிவித்தார். ஆனால் அந்த படத்திற்கு முன் அதர்வாவை வைத்து ‘நிறங்கள் மூன்று’ என்ற படத்தை இயக்குவதாக கூறினார்.
நிறங்கள் மூன்று படத்தில் அதர்வாவுடன் இணைந்து நடிகர்கள் சரத்குமார், ரஹ்மான் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் போஸ்டர்கள் மற்றும் ட்ரெய்லர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
நிறங்கள் மூன்று படத்தின் படப்பிடிப்பு நீண்ட நாட்களுக்கு முன்பே முடித்துவிட்டாலும் தயாரிப்பாளர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது.
நிறங்கள் மூன்று – Rated U/A. Release date will be announced very soon!🎬🤍 @Atharvaamurali @realsarathkumar @actorrahman @Ayngaran_offl #NirangalMoondru pic.twitter.com/xzfC8bmY3o
— Karthick Naren (@karthicknaren_M) December 20, 2023
இந்நிலையில் தற்போது நிறங்கள் மூன்று படத்திற்கு தணிக்கை குழு யூ/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டு நிறங்கள் மூன்று படம் வெளியாகும் என்றும் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
– கார்த்திக் ராஜா
நாளை எந்தெந்த மாவட்டங்களுக்கு விடுமுறை?
ஸ்டாலின் ட்வீட் டெலிட்… தேவிபாரதிக்கு கன்பார்ம் ஆன சாகித்ய அகாடமி!