பையா 2 படத்தில் கார்த்தி ? லிங்குசாமியின் அப்டேட்!

சினிமா

பருத்திவீரன் படத்தின் வெற்றிக்கு பின் இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி, தமன்னா நடிப்பில் 2010 ஆம் ஆண்டு வெளியான படம் பையா.

இந்த படம் வணிக ரீதியாக வெற்றிபெற்றிருந்தாலும் இரண்டாம் பாகத்தை எடுப்பது சம்பந்தமாக கடந்த 12 ஆண்டுகளாக லிங்குசாமி அல்லது கார்த்தி தரப்பில் பேசப்படவில்லை.

பையா படத்தை தயாரித்த திருப்பதி பிரதர்ஸ் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான உத்தமவில்லன் படத்தை தயாரித்ததன் மூலம் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக புதிய படங்களை தயாரிக்க முடியவில்லை.

லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் மீண்டும் படங்களை தயாரிக்கும் முயற்சியை மேற்கொள்ள தொடங்கியபோது பையா படத்தின் இரண்டாம்பாகம் தயாராகவிருப்பதாகவும் அதனை இயக்குநர் ந.லிங்குசாமியே இயக்கவுள்ளார் என்றும் பையா- 2 படத்தில் ஆர்யா கதாநாயகனாக நடிக்கவிருக்கிறார் என்றும் செய்திகள் வெளியானது.

தற்போது அதில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாக தொடங்கியுள்ளது
பையா 2 படத்தின் கதை குறித்து கார்த்தியிடம் இயக்குநர் லிங்குசாமி கூறியுள்ளார் அந்தக் கதை கார்த்திக்குப் பிடித்துவிட்டதாம்.

அதனால், இப்படத்துக்கு வேறு யாரையும் தேடவேண்டாம் நானே நடிக்கிறேன் என்று உறுதி கொடுத்ததுடன் இப்படத்தைத் தயாரிக்கும் தயாரிப்பு நிறுவனத்தை நானே சொல்கிறேன் என்று கார்த்தி சொல்லியிருக்கிறார். அவர் சொன்ன நிறுவனம் ஸ்டுடியோகிரீன் நிறுவனம்.

இதுகேட்டு ந.லிங்குசாமிக்கு அதிர்ச்சி. ஏனெனில், உத்தமவில்லன் படத்தின் தமிழ்நாட்டு திரையரங்க உரிமையை வாங்கியவர் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா. வெளியீட்டுக்கு முதல் நாள் பேசிய அடிப்படையில் பணத்தை தராமல் 24 மணிநேரம் தலைமறைவானவர்.

அதனால் ஒருநாள் உத்தமவில்லன் படம் தாமதமாக வெளியானது. தனது தயாரிப்பு நிறுவனத்தை தொடர்ந்து படங்கள் தயாரிக்காமல் முடக்குவதற்கான வேலைகளை ஞானவேல் ராஜா செய்து வருவதாக லிங்குசாமி தரப்பில் கூறப்பட்டது உண்டு.

இந்தநிலையில் ஞானவேல்ராஜா தயாரிப்பில் எப்படி படத்தை இயக்குவது என்கிற தர்மசங்கடத்தில் லிங்குசாமி புலம்பிவந்த நிலையில்,

பையா – 2 மிகுந்த பொருட்செலவு தேவைப்படும் கதையைக் கொண்டிருப்பதாகவும் அதைக் கையாள ஸ்டுடியோகிரீன் போன்ற ஒரு நிறுவனம் தேவை என கூறி இயக்குநர் லிங்குசாமியின் தயக்கத்தை போக்கிய கார்த்தி,

ஸ்டுடியோகிரீன் நிறுவனத்தின் சார்பில் இயக்குநர் லிங்குசாமியைத் தொடர்பு கொண்டு பேச ஏற்பாடு செய்திருக்கிறார். அந்தப் பேச்சுவார்த்தை சுமுகமாக நிறைவடைந்திருக்கிறது.

இதனால் ,ஸ்டுடியோகிரீன் தயாரிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் பையா-2 என்கிற அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று சொல்கிறார்கள்.

இராமனுஜம்

ரயில் விபத்து… சேவாக் உதவி!

இடிந்து விழுந்த பாலம்: நிதிஷ் குமார் உத்தரவு!

டிஜிட்டல் திண்ணை: திமுகவுடன் தொடர்பு… அதிமுக மாசெக்கள் மாற்றத்துக்குத் தயாராகும் எடப்பாடி

படமாகிறது ஜெகன்மோகன் ரெட்டியின் வாழ்க்கை!

Karthi in Paiyaa 2?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *