இயக்குனர் ராஜூ முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் ஆக்சன் திரில்லர் கதைக்களத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் ஜப்பான்.
ஜப்பான், நடிகர் கார்த்தியின் 25வது படம் என்பதால் இந்த படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.இந்த படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடிகை அணு இமானுவேல் நடித்திருக்கிறார். கே.எஸ்.ரவிக்குமார், சுனில், விஜய் மில்டன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, ரவி வர்மா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
சமீபத்தில் வெளியான ஜப்பான் படத்தின் டீசரும் பாடலும் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் ஜப்பான் படத்தின் ப்ரோமோஷனாக கார்த்தி 25 கொண்டாட்ட நிகழ்ச்சி அக்டோபர் 28 ஆம் தேதி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இதுவரை நடிகர் கார்த்தியுடன் பணியாற்றிய இயக்குனர்கள், நடிகர்கள், தயாரிப்பார்கள், கார்த்தியின் நண்பர்கள் என அனைவரும் கலந்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் ஜப்பான் படத்தின் ட்ரெய்லரை படக் குழு வெளியிட்டனர்.
ஜப்பான் ட்ரெய்லரில் நடிகர் கார்த்தியின் வித்தியாசமான உடல் மொழியும், குரலும், அவர் பேசும் வசனங்களும் செம மாஸ். ஜப்பான் டீசர் மற்றும் ட்ரெய்லரில் கார்த்தியை ஒரு நெகட்டிவ் ஷேடு கதாபாத்திரம் போல் தான் காட்டிருக்கிறார்கள்.
இந்த படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ட்ரெய்லரின் இறுதியில் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் எதுவும் இல்லை. இருந்தாலும், ஜப்பான் படம் நவம்பர் 10 ஆம் தேதி வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கார்த்திக் ராஜா
ICC WorldCup: சொதப்பிய வங்கதேசம்…. சுருட்டி வீசிய நெதர்லாந்து!
சியான் 62 : மீண்டும் கிராமத்திற்கு திரும்பிய விக்ரம்