karthi coming to attract in mgr getup

எம்.ஜி.ஆர் கெட்டப்பில் நடிகர் கார்த்தி

சினிமா

இயக்குனர் ராஜூ முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தியின் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஜப்பான். ஜப்பான் படம் நடிகர் கார்த்தியின் 25வது படமாகும். இந்தப் படத்தை ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

ஜப்பான் படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக அனு இமானுவேல் நடித்திருக்கிறார். சமீபத்தில் ஜப்பான் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. வரும் தீபாவளிக்கு இந்த படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் கார்த்தி இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கத்தில் நடித்து வருகிறார். இன்னும் பெயரிடப்படாத இந்த புது படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்த படத்தில் கீர்த்தி ஷெட்டி, ராஜ்கிரண், சத்யராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

இந்த படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தில் நடிகர் கார்த்தி எம்ஜிஆர் கெட்டப்பில் நடிக்க இருப்பதாக சில தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த படத்தின் கதைப்படி நடிகர் ராஜ்கிரண் ஒரு தீவிர எம்ஜிஆர் ரசிகர்.

அவரது பேரனாக நடிக்கும் நடிகர் கார்த்தியும் எம்ஜிஆர் ரசிகராக இருப்பதால், படத்தின் ஒரு காட்சியில் மட்டும் நடிகர் கார்த்தி எம்ஜிஆர் கெட்டப்பில் வருவதாக கூறப்படுகிறது.

சூது கவ்வும், காதலும் கடந்து போகும் ஆகிய இரண்டு படங்களை மட்டுமே இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கி இருக்கிறார்.

இருப்பினும் நலன் குமாரசாமி, கார்த்தி கூட்டணியில் உருவாகும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் அளவில் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

மேலும் இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்து வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த சர்தார் படத்தின் இரண்டாம் பாகம் கூடிய விரைவில் வெளியாகும் என்று நடிகர் கார்த்தி தனது எக்ஸ் பக்கத்தில் நேற்று (அக்டோபர் 21ஆம் தேதி) அறிவித்தார்.

அடுத்தடுத்து நடிகர் கார்த்தியின் படங்கள் குறித்த அப்டேட்டுகள் தொடர்ந்து வெளியாவதால், அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் நடிகர் கார்த்தியை கொண்டாடி வருகின்றனர்.

கார்த்திக் ராஜா

SK 21 இயக்குனருக்கு பிறந்தநாள் ஸ்பெஷல் வீடியோ..!

நியூசிலாந்துக்கு எதிரான போட்டி… இந்திய அணிக்கு கிடைத்த குட் நியூஸ்!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *