பொன்னியின் செல்வன்’, ‘விக்ரம்’ படங்களை காட்டிலும் வசூலை குவித்த காந்தாரா

சினிமா

தென்னிந்திய சினிமாவில் 2022 ஆம் ஆண்டு வெளியான படங்கள் இதுவரை எப்போதும் இல்லாத வகையில் சாதனைகளை நிகழ்த்தி ஆச்சர்யப்படுத்தி வருகின்றன.

இந்த வருடம் ஜூன் 3 அன்று வெளியான விக்ரம் திரைப்படம் பாக்ஸ் ஆபீஸ் வசூலில் கதாநாயகனும் தயாரிப்பாளருமான கமல்ஹாசனையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

100 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட விக்ரம் பாக்ஸ் ஆபீஸ் வசூலில் மட்டும் சுமார் 250 கோடி வருவாய்(மொத்த வசூல் சுமார் 480 கோடி) தயாரிப்பாளருக்கு கிடைத்தது.

இந்த சாதனையை வேறு எந்த தமிழ் படமும் முறியடிக்க முடியாது என எல்லோரும் பேசிக் கொண்டிருந்த வேளையில் செப்டம்பர் 30 அன்று வெளியான பொன்னியின் செல்வன் இரண்டு வாரங்களில் விக்ரம் சாதனையை முறியடித்தது.

பொன்னியின் செல்வன் வசூல் சாதனையை பேசிக்கொண்டிருக்கின்ற சூழலில் அந்தப்படம் வெளியான அன்று கர்நாடகாவிலும், மொழி மாற்றம் செய்யப்பட்டு அக்டோபர் 15 அன்று பிற மாநிலங்களிலும் வெளியான ” காந்தாரா“கல்லா கட்டி ஆச்சர்யப்படுத்தியது.

தமிழ்நாட்டில் பீஸ்ட் படத்திற்கே போட்டியாளராக களமிறங்கி வெற்றி பெற்ற கேஜிஎஃப் படத்தின் பார்வையாளர் எண்ணிக்கை சாதனையை கர்நாடக மாநிலத்தில் முறியடித்து முதல் இடத்திற்கு வந்தது காந்தாரா.

இந்நிலையில் ‘காந்தாரா’வின் தெலுங்கு வெளியீட்டில் மட்டும் இந்தப் படத்திற்கு 45 கோடிக்கும் அதிகமாக வசூல் ஆகியுள்ளது.

இது ‘பொன்னியின் செல்வன்’, ‘விக்ரம்’ படங்களின் தெலுங்கு பதிப்பின் வசூலைவிட அதிகமாகும்.

தமிழ்நாட்டில் தீபாவளியையொட்டி ‘பிரின்ஸ்’, ‘சர்தார்’ ஆகிய படங்கள் திரைக்கு வந்தன. அந்த நேரத்தில் குறைவான திரையரங்குகளில் ‘காந்தாரா’ படம் திரையிடப்பட்டிருந்தது.

‘பிரின்ஸ்’ படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில், ‘காந்தாரா’ படத்திற்குக் கூடுதல் தியேட்டர்கள் கிடைத்தது. இதனால் காந்தாரா படம் தற்போது தமிழ்நாட்டில் 100 தியேட்டர்களுக்கும் மேல் திரையிடப்பட்டுள்ளது.

தற்போது தமிழக திரையரங்குகளில் ‘சர்தார்’, ‘பொன்னியின் செல்வன்’, ‘காந்தாரா’ ஆகிய 3 படங்கள்தான் அதிக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கின்றன.

இராமானுஜம்

வணிக சிலிண்டர் விலை குறைந்தது!

கிச்சன் கீர்த்தனா : மிளகு காரா சேவ்

+1
1
+1
2
+1
0
+1
1
+1
2
+1
2
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *