காப்புரிமையை மீறி இயற்றப்பட்ட காந்தாரா பாடல்?

சினிமா

கன்னடத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற காந்தாரா படத்தில் இடம்பெற்றுள்ள ‘வராஹ ரூபம்’ காப்புரிமையை மீறி இயற்றப்பட்டுள்ளதாக கேரள மாநில இசைக்குழு குற்றம்சாட்டியுள்ளது.

கடந்த செப்டம்பர் 30 அன்று கன்னட மொழியில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த காந்தாரா திரைப்படம், 100 கோடி ரூபாய் வசூலை கடந்த 6வது படம் என்கிற சாதனையை நிகழ்த்தியது.

பிறமொழி கலைஞர்களும், சினிமா விமர்சகர்களும் காந்தாரா படத்தை படைப்பு ரீதியாக பாராட்டி வந்தனர்.

அதனால் இந்தப் படத்தைதமிழ், தெலுங்கு,மலையாளம், இந்தி மொழிகளிலும் டப்பிங் செய்து அக்டோபர் 15 அன்று வெளியிடப்பட்டது.

தீபாவளி பண்டிகையையொட்டி வெளியான புதிய படங்களுக்கு இணையாக வசூலை குவித்து வருகிறது காந்தாரா.

இந்த நிலையில் படத்தின் மிகப் பெரும்வெற்றிக்கு காரணமான கிளைமேக்ஸ் காட்சியில் இடம் பெற்றுள்ள,

‘வராஹ ரூபம்’ பாடல் தங்களது ‘நவரசம்’ பாடலின் காப்பிதான் என வெளிப்படையாகக் குற்றம்சாட்டியுள்ளது கேரளத்தைச் சேர்ந்த ‘தைக்குடம் பிரிட்ஜ்’ என்கிற இசைக்குழு.

2013ஆம் ஆண்டு முதல் இயங்கிவரும்  ‘தைக்குடம் பிரிட்ஜ்’ இசைக்குழு, மலையாள மொழியில் தனிப்பாடல்களை இயற்றி இசையமைத்து வெளியிட்டு வருகிறது .

விஜய் சேதுபதி- த்ரிஷா நடிப்பில் தமிழில் வெளியாகி வெற்றிபெற்ற‘96’ திரைப்படத்தின் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தாவும் அவருடைய நண்பர்களும் இக்குழுவை நடத்தி வருகின்றனர்.

கடந்த 2017ஆம் ஆண்டு ‘நவரசம்’ என்கிற பாடலை இக்குழு இயற்றி வெளியிட்டது. யூடியூபில் வெளியான இப்பாடலை 40 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.

கேரள நடன முறைகளில் ஒன்றான ‘தைய்யம்’ நடனத்தைப் பற்றிய பாடலாக நவரசம் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

இப்பாடலின் காப்பிதான் ‘வராஹ ரூபம்’ எனக் குற்றம்சாட்டியிருக்கும் தைக்குடம் பிரிட்ஜ் இசைக்குழு இன்ஸ்டாகிராமில் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.

அதில், “வராஹ ரூபம் பாடல் காப்புரிமைச் சட்டத்தை மீறி இயற்றப்பட்டிருக்கிறது. பாடல் திருட்டுக்கும் பாடலைத் தழுவி இயற்றப்படுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது.

இப்பாடல் நவரசம் பாடலின் காப்பி என்பதால் சட்டரீதியாக காந்தாரா படக்குழுவினர் மீது நடவடிக்கை எடுக்க உள்ளோம். எங்களது பாடலின் காப்புரிமையைப் பாதுகாக்க ரசிகர்கள் ஆதரவு தர வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளது.

எனினும், இது குறித்து காந்தாரா படத் தயாரிப்பாளர் தரப்பிலும் இயக்குநர் ரிஷப் ஷெட்டி, இசையமைப்பாளர் அஜனீஷ் லோக்நாத் தரப்பிலும் இருந்து இன்னும் எந்தப் பதிலும் வரவில்லை.

இராமானுஜம்

இயக்குநர் பேரரசுக்கு விருது… திடீர் அதிர்ச்சி கொடுத்த நித்தியானந்தா!

டாப் 10 செய்திகள் : இதை மிஸ் பண்ணாதீங்க..!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *