காந்தாரா: ரஜினிகாந்தின் கருத்தும் ரிஷப் ஷெட்டியின் பதிலும்!

சினிமா

காந்தாரா திரைப்படம் தன்னை மெய்சிலிர்க்க வைத்ததாக நடிகர் ரஜினிகாந்த் மொத்த படக்குழுவிற்கும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

கேஜிஎஃப் படத் தயாரிப்பு நிறுவனமான ஹோம்பலே பிலிம்ஸ் தயாரிப்பில் ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் கன்னட மொழியில் காந்தாரா திரைப்படம் கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியானது.

கன்னட மொழியில் எதிர்பாராத வெற்றியைப் பெற்ற காந்தாரா திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டுக் கடந்த 15ம் வெளியிடப்பட்டது.

கன்னட மொழியைப் போலவே மற்ற மொழிகளிலும் நல்ல வரவேற்பையும் வெற்றியையும் காந்தாரா பெற்றுள்ளது. ரிஷப் ஷெட்டி காந்தாரா படத்தை இயக்கியது மட்டுமல்லாது, இப்படத்தில் அட்டகாசமாக நடித்தும் உள்ளார்.

இதனால் படத்தைப் பார்த்த தனுஷ், கார்த்தி, எஸ்.ஜே.சூர்யா, கங்கனா ரனாவத் உள்ளிட்ட பிரபல நட்சத்திரங்கள் பலரும் ரிஷப் ஷெட்டிக்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வரிசையில், காந்தாரா படம் பார்த்த நடிகர் ரஜினிகாந்த், படக்குழுவினரை பாராட்டி இன்று ட்வீட் செய்துள்ளார்.

அந்த பதிவில், ”தெரிந்ததை விடத் தெரியாதது தான் அதிகம் என்பதை சினிமாவில் ‘காந்தாரா’ படத்தை விட யாரும் தெளிவாகச் சொல்லியிருக்க முடியாது. காந்தாரா படம் என்னை மெய்சிலிர்க்க வைத்தது. எழுத்தாளராக, இயக்குநராக மற்றும் நடிகராக இருந்த ரிஷப் ஷெட்டிக்கு வாழ்த்துகள்

இந்திய சினிமாவின் தலைசிறந்த படைப்பாக உருவெடுத்துள்ள இந்த படத்தில் பணியாற்றிய ஒட்டுமொத்த நடிகர்களுக்கும், படக்குழுவினருக்கும் வாழ்த்துகள்” என்று கூறியுள்ளார்.

ரஜினிகாந்த்தின் இந்த பதிவிற்கு ரிஷப் ஷெட்டி நன்றி தெரிவித்துள்ளார். “நீங்கள் இந்தியாவின் மிகப்பெரிய சூப்பர் ஸ்டார். சிறுவயதிலிருந்தே நான் உங்கள் ரசிகன். உங்கள் பாராட்டு மூலம் என் கனவு நனவாகியிருக்கிறது. உள்ளூர் கதைகளைப் படமாக்க உங்களுடைய இந்த வாழ்த்து என்னை மேலும் தூண்டியிருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

மோனிஷா

கோவை கார் வெடிப்பு வழக்கு: என்.ஐ.ஏ விசாரிக்க முதல்வர் பரிந்துரை!

கோடநாடு வழக்கு: முதன்முறையாக ஊட்டிக்கு விரைந்த சிபிசிஐடி டிஜிபி!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *