கேஜிஎஃப் படத்தை தயாரித்த ஹோம்பலே பிலிம்ஸ் தயாரிப்பில் அக்டோபர் 5 அன்று வெளியான கன்னட திரைப்படம் ‘கந்தாரா’.
பண்ணையாருக்கும் பழங்குடி மக்களுக்குமான நிலப் பிரச்சினையை கடந்தகால சூழ்நிலையின் அடிப்படையில் சமரசமின்றி பதிவு செய்திருக்கும் இந்தப் படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்திருக்கிறார்.
தமிழகத்தைச் சேர்ந்த கிஷோர், கதாநாயகியாக சப்தமிகவுடா என பலர் நடித்துள்ளனர்.
இன்றைக்கும் பொருந்திப்போகின்ற நிலபிரபுத்துவம், அதனையொட்டிய நில அரசியல், அதற்கு துணை நிற்கும் அரசு நிர்வாகம், பாதிக்கப்படும் பாரம்பரிய பழங்குடி இன மக்கள், இவர்களை மையமாக கொண்ட திரைக்கதை என படம் பார்வையாளர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது .
இந்தப் படத்தின் வருகையால் கர்நாடகாவில் பொன்னியின் செல்வன் படத்தின் வசூல் குறைந்ததுடன், திரைகள் எண்ணிக்கையும் குறைந்தது.
தமிழக திரையரங்குகளில் பொன்னியின் செல்வன் ஆதிக்கம் செலுத்தி வருவதை போன்றே கந்தாரா கன்னடப்படம் கர்நாடக மாநில திரைகளில் ஆதிக்கம் செலுத்தி வசூலை குவித்து வருகிறது.
கர்நாடகா மாநிலத்தை கடந்து அண்டைமாநிலங்களிலும் படத்துக்கான வரவேற்பு அதிகமாக இருப்பதை அடுத்து தற்போது படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் மொழிமாற்றம் செய்து அக்டோபர் 14ஆம் தேதி வெளியிட போவதாக அறிவித்துள்ளது படத்தை தயாரித்துள்ள ஹோம்பலே பிலிம்ஸ்.
இராமானுஜம்
அற்றைத் திங்கள் அந்நிலவில்: திண்டுக்கல் லியோனியின் கிண்டல் பேச்சு!
முதல்வரின் தமிழ்மொழி கரிசனம் – அழுவதா? சிரிப்பதா?: அண்ணாமலை விமர்சனம்!