உலகம் முழுவதும் காந்தாரா படம், வசூலை வாரிக் குவித்திருக்கிறது.
கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டியின் இயக்கத்தில் தொன்மக் கதையை மையமாகக் கொண்டு உருவான திரைப்படம் ‘காந்தாரா’. 1800-களில் குறுநில ராஜா ஒருவர் பழங்குடிகளுக்கு வனப்பகுதியை ஒட்டிய நிலத்தை தானமாக வழங்குகிறார்.
ஆனால், அவருடைய சந்ததியினர் தங்களின் பூர்விக நிலத்தை பழங்குடியினரிடமிருந்து பறிக்க முயற்சிக்கும் கதையே இப்படம்.
கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி கன்னட மொழியில் மட்டுமே வெளியான இப்படம், கர்நாடகாவில் விமர்சன ரீதியில் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், நல்ல வசூலையும் வாரிக் குவித்தது.
இதையடுத்து, படத்தை மற்ற மொழிகளில் வெளியிட அப்படத்தை தயாரித்த தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்து, இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் சமீபத்தில் வெளியிடப்பட்டது.
தற்போது அனைத்து மொழிகளிலும் இந்த படம் வசூலில் சாதனை படைத்துள்ளது. ‘காந்தாரா‘ திரைப்படம் உலகம் முழுவதும் இதுவரை ரூ.400 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, கேரளாவில் ரூ.19.2 கோடியையும், வட இந்தியாவில் ரூ.96 கோடியையும், தெலுங்கில் ரூ.60 கோடியையும், தமிழ்நாட்டில் 12.70 கோடியையும் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கர்நாடகாவில் மட்டும் ரூ.168.5 கோடி ரூபாயை படம் வசூலித்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் வெளிநாட்டில் ரூ.44 கோடியை வசூலித்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
ஜெ.பிரகாஷ்
2024 டி20 உலகக்கோப்பை: கிரிக்கெட் முறையில் மாற்றம்!