கன்னட மொழியில் வெளியான காந்தாரா படம் இந்தியா முழுவதும் அனைத்து தரப்பு மக்களின் கவனத்தை ஈர்த்து பிரம்மாண்ட வெற்றியை பெற்றது. இந்த படத்தை நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்திருந்தார். கேஜிஎஃப் படத்தை தயாரித்த ஹோம்பாளே பிலிம்ஸ் நிறுவனம் தான் காந்தாரா படத்தை தயாரித்திருந்தது.
ரூ.16 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட காந்தாரா படம், ரூ.400 கோடி வரை வசூல் செய்து இந்திய திரையுலகையே ஆச்சரியப்படுத்தியது.
இதனை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாவது பாகம் உருவாகும் என்று சில மாதங்களுக்கு முன்பே படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. காந்தாரா முதல் பாகத்தின் prequel ஆக காந்தாரா 2 உருவாக உள்ளது என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் காந்தாரா 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் நவம்பர் 27-ஆம் தேதி மதியம் 12.25 மணிக்கு வெளியாகும் என்று ஹோம்பாளே பிலிம்ஸ் நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில் அறிவித்துள்ளது. காந்தாரா 2 படம் முதல் பாகத்தின் prequel என்பதை உறுதிப்படுத்தும் வகையில் காந்தாரா – தி லெஜன்ட் சாப்டர் 1 என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
காந்தாரா 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மலரொளியே மந்தார மலரே – தாய்மைக்கும் உண்டோ அடைக்கும் தாழ்? கேரள பெண் போலீஸின் கருணை!
கே.எஸ்.அழகிரியை கண்டித்து ரூபி மனோகரன் ஆதரவாளர்கள் போராட்டம்!