ஆஸ்கர் விருது : இன்ப அதிர்ச்சி கொடுத்த காந்தாரா
ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள ‘காந்தாரா’ திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரைப் போட்டியில் இரண்டு பிரிவுகளில் தகுதி பெற்றுள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் 30ம்தேதி வெளியான தமிழின் பிரம்மாண்ட திரைப்படம் ’பொன்னியின் செல்வன்’. ஆனால் அதே தேதியில் கன்னடத்தில் மட்டும் நடிகரும், இயக்குநருமான ரிஷெப் ஷெட்டியின் ‘காந்தாரா’ திரைப்படம் வெளியாகி பெரும் வரவேற்பினை பெற்றது.
அதனைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் படம் வெளியிடப்பட்டது. இதன்மூலம் வெறும் ரூ.16கோடியில் உருவாக்கப்பட்ட இத்திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் ரூ.400 கோடி வரை வசூல் வேட்டை நடத்தியது.
இதற்கிடையே காந்தாரா திரைப்படம் 2023ம் ஆண்டுக்கான 95வது ஆஸ்கர் விருதின் பரிந்துரைக்கு கடைசி நேரத்தில் அனுப்பப்பட்டது.
இந்நிலையில் காந்தாரா திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரைப் போட்டியில் இரண்டு பிரிவுகளில் இடம்பெற தகுதி பெற்றுள்ளதாக படத்தினை தயாரித்த ஹோம்பேல் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது.
சிறந்த படம் மற்றும் சிறந்த நடிகர் ஆகிய இரு பிரிவுகளில் அகாடமி விருதுகள் பட்டியலில் இடம் பிடித்துள்ள காந்தாரா திரைப்படம் 9,579 ஆஸ்கர் உறுப்பினர்கள் வாக்களிக்க தகுதியுடையதாக மாறியுள்ளது.
இந்த பரிந்துரைப்பட்டியலில் 301படங்கள் இடம்பெற்றுள்ளன. இதற்கு வரும் 12ம் தேதி முதல் 17ம்தேதி வரை ஆஸ்கர் உறுப்பினர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவர்.
அதன் அடிப்படையில் இறுதிப் பட்டியல் வரும் 24ம் தேதி வெளியாக உள்ளது. அதனைத் தொடர்ந்து மார்ச் 12ம்தேதி ஆஸ்கர் விருது விழா அமெரிக்காவில் விமரிசையாக நடைபெறும்.
இந்த ஆண்டு காந்தாரா திரைப்படத்துடன், ஆர்.ஆர்.ஆர், தி காஷ்மீர் பைல்ஸ், கங்குபாய் கத்தியாவாடி, இரவின் நிழல், செல்லோ ஷோ, மீ வசந்த்ரோ, ராக்கெட்ரி: தி நம்பி எபெக்ட்,,
தி நெக்ஸ்ட் மார்னிங் மற்றும் விக்ராந்த் ரோனா ஆகிய இந்திய திரைப்படங்கள் பல்வேறு பிரிவுகளில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
கிறிஸ்டோபர் ஜெமா
மண்ணில் புதையும் ஜோஷிமத் நகரம்: உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு!
சச்சின் சாதனையை உடைக்கப்போகும் கோலி