2022 ஆம் ஆண்டு வெளியான காந்தாரா படம் இந்திய ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து 400 கோடி ரூபாய் வரை வசூல் செய்து மெகா ஹிட்டாக அமைந்தது. நாட்டார் தெய்வ வழிபாடு குறித்தும் அடக்குமுறை குறித்தும் பேசிய இந்த படத்தை நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்திருந்தார். ஹோம்பாளே பிலிம்ஸ் நிறுவனம் காந்தாரா படத்தை தயாரித்திருந்தது.
காந்தாரா படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாவது பாகம் உருவாகும் என்று அறிவித்திருந்தது. காந்தாரா படத்தின் முன் கதையாக (Prequel) காந்தாரா 2 உருவாக உள்ளது என்று படக்குழு தெரிவித்தது.
Step into the land of the divine 🔥
Presenting #KantaraChapter1 First Look & #Kantara1Teaser in 7 languages❤️🔥
▶️ https://t.co/GFZnkCg4BZ#Kantara1FirstLook #Kantara @shetty_rishab @VKiragandur @hombalefilms @HombaleGroup @AJANEESHB @Banglan16034849 @KantaraFilm pic.twitter.com/2GmVyrdLFK
— Hombale Films (@hombalefilms) November 27, 2023
இந்நிலையில் இன்று நவம்பர் 27 ஆம் தேதி காந்தாரா 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகி உள்ளது. காந்தாரா படத்தின் முன் கதை (prequel) என்பதால் காந்தாரா சாப்டர் 1 என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
காந்தாரா சாப்டர் 1 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
– கார்த்திக் ராஜா
டிஸ்பிளே இல்லாத உலகின் முதல் AI Pin ஸ்மார்ட்போன்… சிறப்பம்சங்கள் என்னென்ன?
வி.பி.சிங் என்னிடம் சொன்ன அந்த வார்த்தை… டெல்லி ஃபிளாஷ்பேக்… நெகிழ்ந்த ஸ்டாலின்