செப்டம்பர் 2022ல் கன்னட மொழியில் வெளியான காந்தாரா திரைப்படத்தின் இரண்டாம் பாகம் 2024ஆம்ஆண்டு வெளியாகும் என அப்படத்தின் இயக்குநர் ரிஷப் ஷெட்டி தெரிவித்துள்ளார்.
ரிஷப் ஷெட்டி நடித்து இயக்கிய ‘காந்தாரா’ திரைப்படம் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் கன்னடத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பையும், வசூலையும் குவித்தது.
அதன் காரணமாக மற்ற இந்திய மொழிகளிலும் படம் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இதன் காரணமாக ரூ.16 கோடியில் தயாரிக்கப்பட்ட காந்தாரா ரூ.460 கோடி வசூலித்து சாதனை படைத்தது.
‘காந்தாரா’ வெளியாகி 100நாட்கள் நிறைவுபெற்றதை முன்னிட்டு வெற்றி விழா நடைபெற்றது. விழாவில் காந்தாரா படத்தில் பணியாற்றிய திரைக்கலைஞர்கள் அனைவருக்கும் வெண்கலசாமி சிலை நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது.
இந்நிலையில் காந்தாரா படத்தின் நடிகரும் இயக்குநருமான ரிஷப் ஷெட்டி இரண்டாம் பாகம் குறித்து தகவல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர், “தற்போது வெளியாகியிருப்பது ‘காந்தாரா’ படத்தின் இரண்டாம் பாகம்தான். கதைப்படிப் பார்த்தால் முதல் பாகம் அடுத்த ஆண்டு வெளியாகும்.
படத்தில் இடம்பெற்ற தெய்வத்தின் பின்னணி பற்றி சொல்லப்படும் கதைதான் அடுத்த பாகத்தில் இருக்கும்.‘காந்தாரா’வின் வரலாறு இன்னும் ஆழமானது. அதைத்தான் அடுத்து வரும் பாகத்தில் சொல்லவிருக்கிறோம்.
அது தொடர்பான ஆய்வில் ஈடுபட்டிருக்கின்றோம். இந்த ஆய்வு ஆரம்பக்கட்டத்தில் இருப்பதால் இது குறித்து நிறைய விஷயங்களை தற்போது சொல்ல முடியாது. விரைவில் படம் குறித்து அறிவிப்பு வெளியாகும்” என்றார்.
இராமானுஜம்
சென்னையில் விஷவாயு தாக்கி தொழிலாளி பலி: துயர நிலை மாறுமா?
ஓராண்டிற்குள் 6வது முறை ரெப்போ வட்டி விகிதம் உயர்வு!