உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் கண்ணை நம்பாதே படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.
இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தை இயக்கிய இயக்குநர் மு.மாறன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் கண்ணை நம்பாதே படத்தில் நடித்துள்ளார். உதயநிதிக்கு ஜோடியாக ஆத்மிகா நடித்துள்ளார்.
மேலும் இந்த படத்தில், சதீஷ், பூமிகா சாவ்லா, பிரசன்னா, ஸ்ரீகாந்த், வசுந்தரா உட்பட பலர் நடித்துள்ளனர். லிப்பி சினி கிராப்ட்ஸ் சார்பில் வி.என்.ரஞ்சித் குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு சித்துக்குமார் இசையமைத்துள்ளார். ஜலந்தர் வாசன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி கண்ணை நம்பாதே படத்தின் டிரெய்லர் வெளியானது. தொடர்ந்து, க்ரைம் திரில்லர் படமாக மார்ச் 17 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. திரையரங்கு வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயிண்ட் மூவிஸ் பெற்றுள்ளது.
படம் வெளியாவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படக்குழு புரோமோஷன் வேலைகளைத் தொடங்கியுள்ளது. அதன்படி இன்று (மார்ச் 6) கண்ணை நம்பாதே படத்தின் முதல் பாடலான “குறுகுறு” வெளியாகியுள்ளது.
சித்து குமார் இசையில், விக்னேஷ் ராமகிருஷ்ணன் பாடல் வரிகளில், அதித்யா ஆர்.கே. இந்த பாடலை பாடியுள்ளார். மெலோடி காதல் பாடலாக இப்பாடல் இருக்கின்றது.
இப்பாடல் வெளியாகி 10 ஆயிரம் பார்வைகளையும் 1,200 லைக்குகளையும் பெற்றுள்ளது.
மோனிஷா
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மீண்டும் ஒலிபெருக்கிகள்!
கொளுத்தும் வெயில்: உயர்மட்ட ஆலோசனையில் பிரதமர் முக்கிய அறிவுரை!