சூர்யா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள கங்குவா திரைப்படம் எப்போது வெளியாகும் என்ற உச்சகட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
இத்திரைப்படத்தில் சூர்யா பல்வேறு கெட்டப்புகளில் நடித்துள்ளார். அவருடன் பிரபல பாலிவுட் நட்சத்திரங்கள் திஷா பதானி மற்றும் நடிகர் பாபி தியோல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
சிறுத்தை சிவா இயக்கியுள்ள இத்திரைப்படம் முதலில் வரும் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ‘வேட்டையன்’ திரைப்படம் அதே அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாவது உறுதியான நிலையில், ‘கங்குவா’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு தள்ளிவைத்தது.
ஏற்கெனவே படத்தின் டீசர், டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், கங்குவா எப்போது வெளியாகும் என்று சூர்யா ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்தனர்.
இந்த நிலையில், ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில் புரோமோ வீடியோவுடன் ‘கங்குவா’ ரிலீஸ் தேதியை இன்று அறிவித்துள்ளது.
அதன்படி, ‘கங்குவா’ திரைப்படம் நவம்பர் 14ம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரும் பொருட்செலவில் உருவாகியிருக்கும் கங்குவா திரைப்படத்தை சோலோ ரிலீஸ் செய்ய வேண்டும் என்று படத்தின் தயாரிப்பாளரான ஞானவேல் ராஜா கருதுகிறார்.
அதன்படி நவம்பர் மாதத்தில் பாலிவுட், டோலிவுட் உட்பட மற்ற திரையுலகின் வேறு எந்த பெரிய படங்களும் ரிலீஸ் தேதியை அறிவிக்காத நிலையில், படக்குழு தற்போது நவம்பர் 14ஆம் தேதியை தேர்வு செய்துள்ளது.
மேலும் வியாழக்கிழமை ரீலீஸ் என்பதால் உலகம் முழுவதும் அதிக தியேட்டர்களில் கங்குவா வெளியாகி முதல் நான்கு நாட்களில் மிகப்பெரிய வசூல் சாதனை படைக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
டெல்லி முதல்வராக அதிஷி பதவியேற்பு எப்போது?
படுகா உடையில் பூஜா கண்ணன்… சாய் பல்லவி என்ன செய்கிறார் தெரியுமா?