சூர்யா இரட்டை வேடத்தில் நடித்து சிவா இயக்கியிருக்கும் கங்குவா திரைப்படம் உலகம் முழுவதும் இன்று(நவம்பர் 14) வெளியாகியுள்ளது.
இத்திரைப்படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் பெரும் பொருட் செலவில் தயாரித்துள்ளது. சில வாரங்களுக்கு முன்பே வெளியாகியிருக்க வேண்டிய கங்குவா தயாரிப்பாளர் தரப்பில் சில சிக்கல்கள் இருந்ததால் வெளியாக வில்லை. அந்த சிக்கல்கள் சரி செய்யப்பட்டதை அடுத்து இன்று படம் வெளியாகியுள்ளது.
இத்திரைப்படத்தில் சூர்யாவுடன், திஷா பதானி, இந்தி நடிகர் பாபி தியோல், யோகி பாபு, போஸ் வெங்கட், மன்சூர் அலி கான் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்திற்குத் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க, வெற்றி ஒளிப்பதிவு செய்துள்ளார். இத்திரைப்படத்தை நிஷாத் யூசுஃப் தொகுத்துள்ளார்.
இந்த நிலையில் படத்தைப் பார்த்த மக்கள், டிவிட்டரில் படம் பார்த்த அனுபவத்தைப் பகிர்ந்து வருகிறார்கள்…
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
’நான் நலமுடன் இருக்கிறேன்’ : வீடியோவில் மருத்துவர் பாலாஜி
குழந்தைகள் தினத்தில் முக்கிய கோரிக்கை வைத்த ஏ.ஆர்.ரகுமான்
ஆதவ் ஆர்ஜூனா – லாட்டரி மார்ட்டின் வீடுகளில் அமலாக்கத்துறை ரெய்டு!