சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள கங்குவா திரைப்படம் வெளியான மூன்று நாட்களில் ரூ.127.64 கோடி வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த ஆண்டு சினிமா ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு திரைப்படம் கங்குவா. கடந்த நவம்பர் 14-ஆம் தேதி கங்குவா திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது.
ஆனால், படத்திற்கு கலவையான விமர்சனங்களே கிடைத்தது. இணையம் முழுக்க கங்குவா ரோஸ்ட், ட்ரோல்ஸ் என எதிர்மறை விமர்சனங்களே பெரும்பாலும் நிறைந்திருந்தது. படம் முழுக்க ஒரே இரைச்சலாக இருப்பதாகவும் ரசிகர்கள் பலரும் தெரிவித்திருந்தனர்.
இந்தநிலையில், “கங்குவா படத்தை விமர்சனம் செய்யும்போது படத்தில் உள்ள நல்ல அம்சங்களை மறந்துவிட்டார்கள் என்று நினைக்கிறேன். முதல் நாள் முதல் ஷோ முடிவதற்கு முன்பாகவே கங்குவா படத்திற்கு இவ்வளவு எதிர்மறையான விமர்சனங்கள் வந்தது வருத்தமளிக்கிறது” என்று நடிகை ஜோதிகா நேற்று (நவம்பர் 17) தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
ஒருபுறம் எதிர்மறை விமர்சனங்கள் வந்தாலும், கங்குவா தொடர்ந்து வசூல் சாதனை செய்து வருவதாக படத்தயாரிப்பு நிறுவனமான ஸ்டூடியோ கிரீன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
படம் வெளியான முதல் நாள் 58.62 கோடி வசூல் செய்திருப்பதாக, ஸ்டூடியோ கிரீன்ஸ் நிறுவனம் தெரிவித்திருந்தது. இந்தநிலையில், மூன்று நாட்களில் ரூ.127.64 கோடி வசூலித்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
நாங்கள் விஷக்காளான்கள் தான்… ஆனால்! – எடப்பாடிக்கு உதயநிதி பதிலடி!
ஜவுளித் துறையில் முன்னேறிய மாநிலம் தமிழகம்: மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் பெருமிதம்!