சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘கங்குவா’ திரைப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை படக்குழு தற்போது தொடங்கியுள்ளது.
சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் ‘கங்குவா’ படத்தில் நடித்து வருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக திஷா பதானியும், வில்லனாக பாபி தியோலும் நடித்து வருகிறார்.
கடந்த மாதம் பாபி தியோலின் ‘உதிரன்’ லுக் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. வில்லன் கதாபாத்திரம் என்றாலும் பாபி தியோலுக்கும் படத்தில் ஓபனிங் பாடல் இருக்கிறதாம். மறுபுறம் நாயகி திஷா பதானி போர் வீராங்கனை வேடத்தில் நடித்து வருகிறார்.
அவருக்கு மட்டுமே படத்தில் மொத்தம் 5 சண்டைக்காட்சிகள் உள்ளதாம். சூர்யா இதில் 6 கதாபாத்திரங்களில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. வருகின்ற ஆகஸ்ட் மாதம் இப்படம் உலெகங்கும் வெளியாகும் என தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
இந்த நிலையில் ‘கங்குவா’ படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் மற்றும் விஎப்எக்ஸ் பணிகளை படக்குழு தொடங்கி இருக்கிறது. தற்போது இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.
இதைப்பார்த்த ரசிகர்கள் தங்களது மகிழ்ச்சியை சமூக வலைதளங்களில் வெளிப்படுத்தி படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
‘கங்குவா’ படத்திற்கு பிறகு பேன் இந்தியா படமான ‘கர்ணா’ சுதா கொங்கராவின் இயக்கத்தில் ‘புறநானூறு’, வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வாடிவாசல்’ ஆகிய படங்களில் சூர்யா அடுத்தடுத்து நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அமைச்சர் மீது சூமோட்டோ பதிவு செய்ய இதுதான் காரணம் : நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்
”பிரமாண்ட திருமணம்” காதலரை கரம்பிடிக்கும் ‘இந்தியன் 2’ நடிகை!