சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாக்கி வரும் படம் கங்குவா. இந்த படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் கொடைக்கானல்,கோவா, தாய்லாந்து, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது.
சமீபத்தில் நடிகர் சூர்யா கங்குவா படத்தில் தனது காட்சிகள் அனைத்தும் நிறைவடைந்து விட்டதாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். கங்குவா படத்தில் சூர்யாவிற்கு வில்லனாக பாபி தியோல் நடிக்கின்றார்.
For he was touched by fire, chosen as a beacon of hope🔥
Unveiling the #Kanguva2ndLook tomorrow at 11 AM⚔️#Kanguva🦅⚔️ #HappyPongal🌾 #HappyMakarSankranti🌞@Suriya_offl @DishPatani @directorsiva @ThisIsDSP @GnanavelrajaKe @UV_Creations @KvnProductions @saregamasouth pic.twitter.com/2CucoMWmlf
— Studio Green (@StudioGreen2) January 15, 2024
கடந்த சில நாட்களுக்கு முன்பு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கங்குவா படத்தின் அப்டேட் வெளியாகும் என்று கூறப்பட்டது. இந்நிலையில் கங்குவா படத்தின் புதிய போஸ்டர் நாளை (ஜனவரி 16) காலை 11 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிவிப்பை முன்னிட்டு, நிறைய டாட்டூக்கள் உள்ள கை, அந்த கையை சுற்றி நீல நிற நெருப்பு எரிவது போன்ற வித்தியாசமான ஒரு போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. வரும் ஏப்ரல் மாதம் கங்குவா படம் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…